Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

பிக்குகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில் கருணாவை கைதுசெய்க!

T

The Leader Desk

ஆகஸ்ட் 4, 2021 • 11:19 AM

பிக்குகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில் கருணாவை கைதுசெய்க!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரந்தலாவையில் பிக்குகளைக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில் சி.ஐ.டி.
  • அதன்படி குறித்த சம்பவத்துக்கு பொறுப்புக் கூற வேண்டிய உயிருடன் உள்ளவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல் செய்ய உத்தரவிடுமாறு மனுதாரர் கோரியுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 கோடி ரூபா நட்ட ஈடும் கோரியுள்ளார்.
  • இந் நிலையில் குறித்த மனுமீதான மேலதிக பரிசீலனைகள் எதிர்வரும் ஒக்டோபர் 12 ஆம் திகதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எழுத்து அளவு:

அரந்தலாவையில் பிக்குகளைக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்ட மா அதிபர் நேற்று உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார்.

சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேரா இதனை உயர் நீதிமன்றின் நீதியர்சர்களான பிரியந்த ஜயவர்தன, அச்சல் அவெங்கப்புலி மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியர்சர்கள் குழாம் முன்னிலையில் அறிவித்தார் அதோடு பிக்குகளைக் கொல்லப்பட்ட விவகாரத்தில் , தற்போது உயிருடன் உள்ளவர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த படுகொலையின் போது உயிர் தப்பிய ஆஞ்சா உள்பன புத்தசார தேரரே இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அத்துடன் குறித்த படுகொலைகளுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர் என அவர் அடையாளப்படுத்தும் புலிகள் அமைப்பின் முன்னாள் பிரதானிகளில் ஒருவரான விநாயகமூர்த்தி முரளிதரன் எனும் கருணாவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த காவல் துறை மா அதிபருக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபர், பதில் காவல் துறை மா அதிபர், தேசிய உளவுத் துறை பணிப்பாளர் சுரேஷ் சலே ஆகியோர் இம்மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர் குறித்த மனுவில் மனுதாரர் குறிப்பிட்டுள்ளதாவது,

1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் திகதி, முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் 31 தேரர்களும் பொது மக்களும் கொல்லப்பட்டுள்ளனர் இந்த சம்பவத்துடன், தொடர்புடையவர்கள் பலர் உயிருடன் இருக்கும் நிலையில், அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல் செய்ய கோரப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த சம்பவத்துக்கு பொறுப்புக் கூற வேண்டிய உயிருடன் உள்ளவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல் செய்ய உத்தரவிடுமாறு மனுதாரர் கோரியுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 கோடி ரூபா நட்ட ஈடும் கோரியுள்ளார்.

இந் நிலையில் இந்த மனு தொடர்பிலான பரிசீலனைகள் நேற்று இடம்பெற்ற போது, மனுதாரரான பிக்குவின் வாக்கு மூலத்தை சி.ஐ.டி.யினர் பதிவு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் அவரின் மூலத்தை மையப்படுத்தி மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக சிரேஷ்ட அரச சட்டவாதி அவந்தி பெரேரா மன்றில் சுட்டிக்கடடினார்.

இந் நிலையில் குறித்த மனுமீதான மேலதிக பரிசீலனைகள் எதிர்வரும் ஒக்டோபர் 12 ஆம் திகதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...