Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

சுகாதாரத் துறையின் எச்சரிக்கைகளை மீறி அரசு ஊழியர்கள் வேலைக்கு அழைக்கப்படுகிறார்கள்!

T

The Leader Desk

ஜூலை 31, 2021 • 1:34 PM

சுகாதாரத் துறையின் எச்சரிக்கைகளை மீறி அரசு ஊழியர்கள் வேலைக்கு அழைக்கப்படுகிறார்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதியின் செயலாளர் பி.ஜயசுந்தர அனைத்து அரச ஊழியர்களையும் வழக்கம் போல் சுற்றறிக்கை அடிப்படையில் வரவழைத்து வீட்டிலிருந்து கடமைகள் தொடர்பாக வழங்கப்பட்ட அனைத்து சுற்றறிக்கைகளையும் ரத்து செய்யுமாறு பணித்துள்ளார்.
  • இதற்கிடையில், அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நோய் பரவுவதால் மாதத்திற்கு 4,000 முதல் 4,500 வரையான இறப்புகள் பதிவாக வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.
  • கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஐம்பது சதவீதம் பேர் இன்னும் ஒக்ஸிஜனை நம்பியிருக்கிறார்கள் ”என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே கூறினார்.
  • ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 50 இறப்புகள் நிகழ்கின்றன.
எழுத்து அளவு:

ஜனாதிபதியின் செயலாளர் பி.ஜயசுந்தர அனைத்து அரச ஊழியர்களையும் வழக்கம் போல் சுற்றறிக்கை அடிப்படையில் வரவழைத்து வீட்டிலிருந்து கடமைகள் தொடர்பாக வழங்கப்பட்ட அனைத்து சுற்றறிக்கைகளையும் ரத்து செய்யுமாறு பணித்துள்ளார். இது பொது சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜெ. ரத்னசிறிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரும்பான்மையான அரச ஊழியர்களுக்கும் ,பொதுமக்கள் தொகையில் அனேகமானோருக்கும் கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நோய் பரவுவதால் மாதத்திற்கு 4,000 முதல் 4,500 வரையான இறப்புகள் பதிவாக வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.

நாட்டைத் திறப்பது மிகவும் கவனமாக செய்யப்பட வேண்டிய ஒன்று. கொவிட்  தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஐம்பது சதவீதம் பேர் இன்னும் ஒக்ஸிஜனை நம்பியிருக்கிறார்கள் ”என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே கூறினார்.

தேசிய மருத்துவமனையும் கொவிட் நோயாளிகளால் நிரம்பியுள்ளது. குறிப்பாக குழந்தைகள் மருத்துவமனையும் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் நிரம்பியுள்ளது.வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 50 இறப்புகள் நிகழ்கின்றன. இது ஒரு ஆபத்தான நிலை. போரின் போது கூட இது நடக்கவில்லை என்று வைத்தியர் பிரசாத் கொலம்பகே எச்சரிக்கிறார்.

அரசு பொது ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்யத் தயாராகி வரும் நிலையில், பொதுச்சுகாதார சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, ஊடகங்கள் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்,கொவிட் தொற்றுநோய் எதிர்காலத்தில் மோசமடையக்கூடும் என அவர் கூறினார்.

இப்போது இருப்பது அப்படியான அபாயகரமான சூழ்நிலையின் ஆரம்பம் என்று அவர் மேலும் வலியுறுத்துகிறார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...