Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

T

The Leader Desk

ஜூலை 30, 2021 • 12:42 PM

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!  

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (30) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
  • இலங்கை அரசைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முற்படுத்துவதன் மூலமே எமக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என்பதைக் கூறிக்கொள்கிறோம்.
  • அதன் பின்னர் ஊடகங்களிற்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
எழுத்து அளவு:

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (30) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் ஊடகங்களிற்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

எமக்கு சர்வதேச நீதி கிடைப்பதற்காக நாம் போராடி வருகின்றோம். இன்று பல்வேறு அமைப்புகளையும், கட்சிகளையும் சார்ந்தவர்கள் சர்வதேச நீதி கிடைப்பதற்குத் தடையாக இருந்து அரசைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு எம்மை அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இத்தனை வருடங்களாக வெயிலிலும் , மழையிலும் நாம் போராடிக் கொண்டிருந்த போது அவர்களது அக்கறை எங்கே போனது.

உள்ளூரில் போராடி எதனை நாம் பெற்றுக்கொண்டோம் ஆகவே. இலங்கை அரசைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முற்படுத்துவதன் மூலமே எமக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என்பதைக் கூறிக்கொள்கிறோம்.

இத்தனை வருடங்களாக நாம் போராடி வரும் நிலையில் எமக்கான நீதி கிடைப்பதற்கு எவரும் உறுதுணையாக இருந்ததில்லை. அந்த வலியை அனுபவிப்பவர்களால் மாத்திரமே உணர்ந்து கொள்ள முடியும்.

எமது போராட்டம் வியாபார நோக்கத்திற்கானதல்ல சுயநலத்திற்கானதல்ல. எமது அன்பான உறவுகளின் உயிருடன் தொடர்புபட்டது. எமக்கான நீதி விரைவில் கிடைக்கும் என்பதற்காகவே தொடர்ச்சியாகப் போராடுகிறோம். எமக்கு வாழ்வாதாரம் வழங்குவதற்கோ அரச தரப்பிடம் முற்படுத்துவதற்கோ யாரும் முயற்சி செய்ய வேண்டாம் எனத் தெரிவித்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்! | Tamil Leader | We Lead the Nation