Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

கைவிடப்பட்ட வயல் நிலங்களை விடுவிக்க நடவடிக்கை! நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன்

T

The Leader Desk

ஜூலை 29, 2021 • 2:54 PM

கைவிடப்பட்ட வயல் நிலங்களை விடுவிக்க நடவடிக்கை! நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வன வள திணைக்களத்தினர் வசமுள்ள பொதுமக்களுக்கான காணிகள் தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
  • வெடிவைத்த கல்லு கிராமத்தின் காணிகள் இரண்டு வாரத்திற்குள் வனவளத் திணைக்களத்தால் விடுவிக்கப்படும்.
  • இதன் பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

வன வள திணைக்களத்தினர் வசமுள்ள பொதுமக்களுக்கான காணிகள் தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன் பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதன்போது ஒரு மாத காலத்திற்குள் விடுவிக்கப்படவேண்டிய மேலதிக அரச காடுகளின் பட்டியல் ஒன்று வனவளத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டதுடன், 2000 ஏக்கர் கைவிடப்பட்ட வயல் நிலங்கள் தொடர்பாக கமநலசேவை திணைக்களமும், வன வள திணைக்களத்தினரும் இணைந்து எல்லைகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கையினை உடன் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெடிவைத்த கல்லு கிராமத்தின் காணிகள் இரண்டு வாரத்திற்குள் வனவளத் திணைக்களத்தால் விடுவிக்கப்படும். ஈச்சங்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குப்பட்ட பகுதியில் குடியேற்றம் செய்வதற்குரிய இடத்தினை விடுவிப்பதாகவும் வன வள திணைக்களத்தினர் உறுதியளித்துள்ளனர்.

குறித்த கலந்துரையாடலில் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், செட்டிகுளம் பிரதேச செயலாளர் பாபயோன், கமநலசேவை உதவி ஆணையாளர் விஸ்ணுகாந், வன வள திணைக்கள மாவட்ட அதிகாரி, மற்றும் வனவள உத்தியோகத்தர்கள், தென்னை பயிர்ச்செய்கை முகாமையாளர், பிரதேச செயலகங்களின் திட்டமிடல் பணிப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...