Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

அரசியல்வாதிகளே பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர்! மொழி மட்டுமே தடையாக இருக்கிறது!!

T

The Leader Desk

ஜூலை 30, 2021 • 3:53 AM

அரசியல்வாதிகளே பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர்! மொழி மட்டுமே தடையாக இருக்கிறது!!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உண்மையான தேசப்பற்றாளர் அமைப்பின் முதலாவது ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
  • பெரும்பான்மை சமூகத்தைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய கடப்பாடு, சிறுபான்மையினர் பின்பற்றும் மதத்தை எந்த வகையிலும் நோகடிக்காமல், அவர்களை எதிர்காலம் நோக்கி வழிநடத்த வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு உண்டு.
  • இந்த நாட்டு மக்களுக்கிடையே மொழி மட்டுமே தடையாக இருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

உண்மையான தேசப்பற்றாளர் அமைப்பின் முதலாவது ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நாட்டு மக்களுக்கிடையே மொழி மட்டுமே தடையாக இருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த அவர்,

எமது நாட்டிலே நிலவும் பிரதான பிரச்சினையொன்றைப் பற்றித் தான் நான் இன்று இந்த இடத்தில் பேசுவதற்கு விளைகின்றேன். முக்கியமான பிரச்சினை நாங்கள் மதத்தை முன்னிறுத்துவது. வெறுப்புணர்வான பேச்சுக்களை மிக வெளிப்படையாக ஊடகங்களிலும், சமூக ஊடங்களிலும் சரி மிக வெளிப்படையாக பேசிக்கொண்டிருப்பது. நாங்கள், எதிர்காலத்தை நோக்கி முன்செல்ல முடியாத ஒரு சமூகமாக, ஒரு நாடாக எங்களை நாங்கள் மாற்றிக் கொள்ளும் சூழ்நிலைதான் இங்கிருக்கிறது. மதம் என்பது மனிதனை செம்மைப்படுத்தவதற்கான உருவான ஒன்று. அந்த மதத்தை வைத்து அரசியல் ரீதியாக பிரிவினைகளை உண்டுபண்ணி, அல்லது அந்த மதத்தை வைத்து கடும்போக்காளர்களை உருவாக்கி, இந்த நாட்டை மேலும் மேலும் சின்னாபின்னமாக்கி, இந்த நாடு எந்த வகையிலும் எதிர்காலத்தை நோக்கி முன்னுக்குச் செல்ல முடியாத ஒரு சூழ்நிலையைத் தான் இன்று பலர் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டிய ஒன்று. இந்த நாடு என்பது எந்த மதத்தினருக்கும் சொந்தமற்றது. இந்த நாட்டிலேயே அனைத்து மனதத்தினரும் சுமூகமாக சகோதரத்துவத்துடன் வாழ வேண்டிய ஒரு சூழ்நிலையைக் கட்டியெழுப்ப வேண்டிய ஒரு மாபெரும் பொறுப்பு இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் உண்டு. இந்த நாட்டை யாரும் ஒருவரும், இதுவொரு பௌத்த நாடு, அல்லது இஸ்லாமிய நாடு அல்லது இந்து நாடு அல்லது கிறிஸ்தவ நாடு என்று குறிப்பிட முடியாது.

இந்த நாட்டில் பல மதத்தவர் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டிய ஒரு சூழ்நிலை, அதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய ஒரு கட்டாயம் எங்கள் எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது. மதம் என்பது ஒரு மனிதனை மனிதனாக அன்பை போதிப்பவனா, அன்பை செலுத்துபவனாக இருப்பதற்கான அடிப்படையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய ஒன்றே ஒளிய, சமூகத்தை சின்னாபின்னமாக்கி, இளைஞர்களை வேறு வழியிலே, தீவிரவாதப் போக்குகளைக் கடைப்பிடிக்க வேண்டிய ஒருவனாக மாற்றக் கூடாது என்பது தான் அடிப்படை. இந்த அடிப்படையை நாம் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

மதத்தின் பெயரால் நடைபெறும் ஒடுக்குமுறைகள் நிச்சயமாக தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. பெரும்பான்மை சமூகத்தைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய கடப்பாடு, சிறுபான்மையினர் பின்பற்றும் மதத்தை எந்த வகையிலும் நோகடிக்காமல், அவர்களை எதிர்காலம் நோக்கி வழிநடத்த வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு உண்டு. பெரும்பான்மை இனத்தினரிடமிருந்து தான் சமாதானம் பிறக்க வேண்டும். அதுதான் அனைவரினதும் எதிர்பார்ப்பு. உண்மையில், பெரும்பான்மையினருக்கும், சிறுபான்மையினருக்கும் இடையில் எந்த தடையும் இல்லை. மொழித் தடை தான் இருக்கிறது. வடக்கு, கிழக்கு மக்கள் வேறு மொழியைப் பேசுகின்றனர். தெற்கில் மற்றுமொரு மொழியைப் பேசுகின்றனர். சில அரசியல் வாதிகள் இதில் பெரிய பங்கு வகிக்கின்றனர். அவர்கள் தரகர்களாக செயல்பாடுகிறார்கள். அவர்கள் இந்த மக்களின் கருத்துக்களை திரிபுபடுத்தி, தங்களுக்குத் தேவையான வகையில் பிரசாரம் செய்கின்றனர். மதத்தின் பெயரில் அவர்கள் இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர். இவற்றைத் தவிர்க்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே நாட்டை முன்நோக்கி நகர்த்த வேண்டும். எமது சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...