Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

ஜார்கண்ட் மாநிலத்தில் நடைப்பெயிற்சி சென்ற நீதிபதிமீது ஆட்டோ ஏற்றிக் கொலை!

T

The Leader Desk

ஜூலை 29, 2021 • 11:01 AM

ஜார்கண்ட் மாநிலத்தில் நடைப்பெயிற்சி சென்ற நீதிபதிமீது ஆட்டோ ஏற்றிக் கொலை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜார்கண்ட் மாநிலத்தில் தன்பாக் மாவட்ட நீதிபதியாக இருந்தவர் உத்தம் ஆனந்த்.
  • பொலிசாரிடம் அளித்த அளித்த புகாரில், நீதிபதியின் மனைவி கிருதி சின்ஹா கூறியதாவது:- தனது கணவர் அதிகாலை 5 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறினார். அவர் நீண்ட நேரம் திரும்பி வராதபோது, குடும்பத்தினர் அவரைத் தேடத் தொடங்கினர்.
  • நீதிபதி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பொலிசாருக்கு எழுந்துள்ளது.
எழுத்து அளவு:

ஜார்கண்ட் மாநிலத்தில் தன்பாக் மாவட்ட நீதிபதியாக இருந்தவர்  உத்தம் ஆனந்த். அவர்  ஹிராப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் நேற்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவர் மீது பின்னால்  ஆட்டோ ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றது.ஆட்டோ மோதியதில் படுகாயமடைந்த நீதிபதி உத்தம் ஆனந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.

நீதிபதி மரணம் விபத்து என்று கருதப்பட்ட நிலையில் சாலையோரம் நடந்து சென்ற நீதிபதி மீது ஆட்டோ  ஒன்று மோதியதுடன் நிற்காமல் சென்றது சிசிடிவி காட்சி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொலிசாரிடம் அளித்த  அளித்த புகாரில், நீதிபதியின் மனைவி கிருதி சின்ஹா கூறியதாவது:-  தனது கணவர் அதிகாலை 5 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறினார்.  அவர் நீண்ட நேரம் திரும்பி வராதபோது, குடும்பத்தினர் அவரைத் தேடத் தொடங்கினர். அவரை உள்ளூரை சேர்ந்தவர்கள்  மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர், பின்னால் இருந்து ஒரு ஆட்டோ  அவரைத் தாக்கி உள்ளது. . தயவுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்கவும், ”என்று கூறி உள்ளார்.

நீதிபதி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பொலிசாருக்கு எழுந்துள்ளது. முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சஞ்சீவ் சிங் உதவியாளர் ரஞ்ஜீவ் சிங் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கு ஜாமின் கொடுக்க அண்மையில் நீதிபதி உத்தம் ஆனந்த் மறுத்துவிட்டார்.

சிறையில் உள்ள இருவரும் தாதா அமந்த்சிங் கும்பலை சேர்ந்தவர்கள். எனவே நீதிபதி மரணத்தில் இந்த கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதில் உண்மையை வெளிக்கொண்டு வர சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு ஜார்கண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜார்கண்ட் ஐகோர்ட் வழக்கறிஞர் பிரபாத் சின்ஹா கூறும் போது இது ஒரு திட்டமிட்ட கொலை. ஆட்டோ டிரைவர் வேண்டுமென்றே நீதிபதியைத் தாக்கியதை சிசிடிவி காட்சிகள் தெளிவாகக் காட்டுகின்றன என கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...