Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

ஆசிரியர்,அதிபர் சம்பள முரண்பாடுகளைத் தீர்க்கும் வரையில் போராட்டம் தொடரும்! மஹிந்த ஜயசிங்க

T

The Leader Desk

ஜூலை 29, 2021 • 10:41 AM

ஆசிரியர்,அதிபர் சம்பள முரண்பாடுகளைத் தீர்க்கும் வரையில் போராட்டம் தொடரும்! மஹிந்த ஜயசிங்க

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொழும்பில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • ஆனால், உரிய பதில்கள் இதுவரையில் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
  • பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் நேற்று முன்தினம் (27) நடைபெற்ற கலந்துரையாடலின்போது, இதுதொடர்பில் அமைச்சரவை துணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
  • எவ்வாறாயினும் உறுதியளிக்கப்பட்டதுபோல, வெள்ளிக்கிழமைக்கு (30) முன்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
எழுத்து அளவு:

கொழும்பில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாடுகளைத் தீர்க்கும் வகையில் அமைச்சரவையில் பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அந்த அமைச்சரவைப் பத்திரத்தில் என்ன உள்ளது? அதில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பளம் எவ்வளவு என்று நாம் தொடர்ந்து வினவி வருகிறோம். ஆனால், உரிய பதில்கள் இதுவரையில் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் நேற்று முன்தினம் (27) நடைபெற்ற கலந்துரையாடலின்போது, இதுதொடர்பில் அமைச்சரவை துணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் உறுதியளிக்கப்பட்டதுபோல, வெள்ளிக்கிழமைக்கு (30) முன்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.

இப்பிரச்சினையை இழுத்தடிக்காது விரைவாக தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார். அவ்வாறு தீர்வு வழங்கப்படவில்லை என்றால், தொடர்ந்து போராடுவதற்கும் எதிர்காலத்தில் பல்வேறு வழியில் போராடப்போவதாகவும் எச்சரித்துள்ளதோடு, வெற்றி கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...