Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

நாடளாவிய ரீதியில் அரச தாதியர்கள் சங்கம் போராட்டம்!

T

The Leader Desk

ஜூலை 28, 2021 • 5:15 PM

நாடளாவிய ரீதியில் அரச தாதியர்கள் சங்கம் போராட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
  • போதனா வைத்தியசாலையிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
  • இவ்வாறு 100-க்கும் அதிகமான வைத்தியசாலைகளில் தாதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எழுத்து அளவு:

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

திருகோணமலை பொது வைத்தியசாலையிலும் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தாதியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் சிகிச்சைகளுக்காக வந்த நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

பதவி உயர்வு வழங்கப்படாமை உள்ளிட்ட பல அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மதியபோசன இடைவேளையின் போது, முல்லைத்தீவு மாவட்ட தாதியர் சங்கத்தினர் இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதனிடையே, யாழ். போதனா வைத்தியசாலையிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டாலும், அவசர சிகிச்சை பிரிவுகள், கொரோனா விடுதிகளில் பணியாற்றும் தாதியர்கள் தொடர்ந்தும் சேவையில் ஈடுபட்டிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு 100-க்கும் அதிகமான வைத்தியசாலைகளில் தாதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சரவையில் அனுமதி கிடைத்த தாதியர் சேவையின் கோரிக்கைகள் தொடர்பிலான சுற்றுநிரூபம் வௌியிடப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலைக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

களுபோவில போதனா வைத்தியசாலை, தங்காலை வைத்தியசாலை, மீரிகம வைத்தியசாலை மற்றும் கண்டி வைத்தியசாலையிலும் தாதியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அரச தாதியர் அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு மாத்தளை வைத்தியசாலையின் தாதியர்களும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நாடளாவிய ரீதியில் அரச தாதியர்கள் சங்கம் போராட்டம்! | Tamil Leader | We Lead the Nation