Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீல மாணிக்கக் கற்களின் திரட்சி கஹவத்தயில் கண்டுபிடிப்பு!

T

The Leader Desk

ஜூலை 27, 2021 • 1:21 PM

உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீல மாணிக்கக் கற்களின் திரட்சி கஹவத்தயில் கண்டுபிடிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது 510 கிலோகிராம் நிறையுடையது என மாணிக்கக் கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க குறிப்பிட்டார்.
  • இரத்தினபுரி – கஹவத்த பகுதியிலுள்ள தனியார் ஒருவரின் காணியிலிருந்து இந்த நட்சத்திர நீல மாணிக்கக் கற்களின் திரட்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இது 25,50,000 கரட் பெறுமதியானது எனவும் மிகவும் அரிதான வகையை சேர்ந்த இந்த நட்சத்திர நீல மாணிக்கக் கற்களின் திரட்சி, சர்வதேச சந்தையில் பாரிய விலைமதிப்பை கொண்டதெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எழுத்து அளவு:

இது 510 கிலோகிராம் நிறையுடையது என மாணிக்கக் கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க குறிப்பிட்டார்.

உலகிலே மிகப்பெரிய நட்சத்திர நீல மாணிக்கக் கற்களின் திரட்சி இதுவென அவர் கூறியுள்ளார்.

இரத்தினபுரி – கஹவத்த பகுதியிலுள்ள தனியார் ஒருவரின் காணியிலிருந்து இந்த நட்சத்திர நீல மாணிக்கக் கற்களின் திரட்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நட்சத்திர நீல மாணிக்கக் கற்களின் திரட்சியை பெற்றுக்கொள்வதற்கான பிணை முறியை சர்வதேச கொள்வனவாளர் ஒருவர் சமர்ப்பித்துள்ளதாகவும் மாணிக்கக் கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்தார்.

ஒரு வருடத்திற்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்ட இந்த நட்சத்திர நீல மாணிக்கக் கற்களின் திரட்சியை, பாதுகாப்பு மற்றும் கொரோனா தொற்று நிலைமையால் இரகசியமாக பேணி பாதுகாத்ததாகவும் தற்போது அதனை முழுமையாக சுத்தப்படுத்தி, தரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், நிறையும் அளவிடப்பட்டுள்ளதாகவும் திலக் வீரசிங்க குறிப்பிட்டார்.

இது 25,50,000 கரட் பெறுமதியானது எனவும் மிகவும் அரிதான வகையை சேர்ந்த இந்த நட்சத்திர நீல மாணிக்கக் கற்களின் திரட்சி, சர்வதேச சந்தையில் பாரிய விலைமதிப்பை கொண்டதெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...