Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்! ராகுல்காந்தி

T

The Leader Desk

ஜூலை 26, 2021 • 11:17 AM

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்! ராகுல்காந்தி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த விவசாயிகளுடன் மத்திய அரசு 10-க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
  • இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ந் தேதி முதல் நடந்து வருகிறது.
  • கொரோனாவை காரணம் காட்டி விவசாயிகளுக்கு இந்த போராட்டத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டது.
  • இந்த சட்டம் 3-4 வியாபாரிகளுக்கு மட்டும் ஆதரவாக உள்ளது என்பதை நாடு அறியும் என கூறினார்.
எழுத்து அளவு:

இந்த விவசாயிகளுடன் மத்திய அரசு 10-க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. 3 புதிய சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருப்பதால் இந்த பிரச்சினையில் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதையொட்டி மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக நாடாளுமன்றத்துக்கு வெளியே தினந்தோறும் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர்.ஆனால் விவசாயிகளின் இந்த திட்டத்துக்கு டெல்லி பொலிசார் அனுமதி அளிக்கவில்லை. கொரோனாவை காரணம் காட்டி விவசாயிகளுக்கு இந்த போராட்டத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தங்கள் போராட்டக்களத்தை டெல்லி ஜந்தர் மந்தருக்கு மாற்றிய விவசாயிகள்  கடந்த சில நாட்களாக ஜந்தர் மந்தரில்  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வேளாண்மை சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் சென்றார்.டிராக்டரை தானே ஓட்டி வந்தார்.  தனது வீட்டில் இருந்தே நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் பேரணியாக சென்றார்.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் இதில் கலந்து கொண்டனர்.

பின்னர் நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல்காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

போராடி வரும் விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து கொண்டேன்.  அவர்கள் (மத்திய அரசு) விவசாயிகளின் குரல்களை அடக்குவதோடு நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதில்லை. புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். இந்த சட்டம் 3-4 வியாபாரிகளுக்கு மட்டும் ஆதரவாக உள்ளது என்பதை நாடு அறியும் என கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...