Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

அவுஸ்திரேலியாவில் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

T

The Leader Desk

ஜூலை 25, 2021 • 9:03 AM

அவுஸ்திரேலியாவில் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அங்கு இதுவரை 32 ஆயிரத்து 594 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • ஆனால் தற்போது கொரோனா வைரசின் 2-வது அலை அந்த நாட்டை பாடாய்படுத்தி வருகிறது.
  • குறிப்பாக டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
எழுத்து அளவு:

கொரோனா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்தது,

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு உலக நாடுகளுக்கு பரவ தொடங்கிய சமயத்தில் வளர்ந்த மற்றும் வலுவான சுகாதார கட்டமைப்பை கொண்ட பல நாடுகளும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் திணறின.அதேவேளையில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கொரோனா வைரசை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வந்தன.அதனால் தான் பிற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் அவுஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது. அங்கு இதுவரை 32 ஆயிரத்து 594 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 916 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ்

எல்லைகளை மூடுதல், பாதிப்பு அதிகமுள்ள பகுதியில் கடுமையான ஊரடங்கை அமல் படுத்துதல், சிறப்பான தனிமைப்படுத்தல் திட்டங்கள் போன்றவற்றின் மூலம் கொரோனா வைரசின் முதல் அலையை ஆஸ்திரேலியா வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது. ஆனால் தற்போது கொரோனா வைரசின் 2-வது அலை அந்த நாட்டை பாடாய்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே அங்கு கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. விக்டோரியா, குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய மாகாணங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதி தீவிரமாக உள்ளது. அங்கிருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கும் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு தினசரி பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனிடையே வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பிரதமர் ஸ்காட் மாரிசன் தலைமையிலான அரசு நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு

குறிப்பாக விக்டோரியா, குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய 3 மாகாணங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.‌ இந்தநிலையில் அரசின் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கோபமடைந்த அவுஸ்திரேலியர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். சிட்னி, மெல்பேர்ன், பிரிஸ்போர்ன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.சிட்னி நகரில்‌ பேரணியாக சென்ற ஆயிரக்கணக்கான மக்கள்‌ சாலைகளில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.போராட்டக்காரர்களில் சிலர் ‘‘முக கவசத்தை இறக்கி விட்டு உங்கள் குரலை உயர்த்துங்கள்‘‘ ‘‘அவுஸ்திரேலியாவை தட்டி எழுப்புங்கள்’’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் வைத்திருந்தனர்.

பொலிசார் மீது கற்கள் வீச்சு

இதனிடையே பொலிசார் போராட்டத்தை கலைக்க முயன்றபோது போராட்டக்காரர்களுக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் பொலிசாரை நோக்கி தண்ணீர் பாட்டில்கள், கற்கள் உள்ளிட்டவற்றை வீசி எறிந்தனர்.‌ இதில் பொலிஸ் அதிகாரிகள் பலர் படுகாயமடைந்தனர்.‌ அதேபோல் பொலிசார் போராட்டக்காரர்களை விரட்டியடித்த போது நடந்த தள்ளுமுள்ளில் பலர் காயமடைந்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...