Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

சில விடயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை! மன்னிப்பு கேட்டார் அவுஸ்திரேலிய பிரதமர்

T

The Leader Desk

ஜூலை 24, 2021 • 11:25 AM

சில விடயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை! மன்னிப்பு கேட்டார் அவுஸ்திரேலிய பிரதமர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவுஸ்திரேலியாவில் இதுவரை 11 வீதத்தினர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
  • கொவிட்-19 வைரஸ் பரவலைச் சிறப்பாக கையாண்டதாக பெருமை கொண்டு இருந்த மொரிசனுக்கு, தடுப்பூசி இயக்கத்தைத் தீவிரப்படுத்துவதற்குக் கடுமையான நெருக்கடி எழுந்துள்ளது.
  • நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை சுமார் 124 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகினர்.
  • கடந்த 16 மாதங்களில் பதிவான மிக அதிக எண்ணிக்கையாக இது உள்ளது.
எழுத்து அளவு:

அவுஸ்திரேலியாவில் இதுவரை 11 வீதத்தினர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அதாவது பணக்கார நாடுகள் பட்டியலில் மிக குறைவான தடுப்பூசி விகிதம் கொண்ட நாடாக அவுஸ்திரேலியா உள்ளது.

கொவிட்-19 வைரஸ் பரவலைச் சிறப்பாக கையாண்டதாக பெருமை கொண்டு இருந்த மொரிசனுக்கு, தடுப்பூசி இயக்கத்தைத் தீவிரப்படுத்துவதற்குக் கடுமையான நெருக்கடி எழுந்துள்ளது.

“இந்த ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லை என்பதற்காக வருந்துகிறேன். சொல்லப் போனால், சில விடயங்கள் நம் கட்டுப்பாட்டில் உள்ளன, சில விஷயங்கள் இல்லை,” என்றார் மொரிசன்.

சிட்னியில் வைரஸ் தொற்று மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் கட்டுப்பாடுகள் நீண்ட நாட்களுக்கு இருக்கக்கூடும் என்றும் சிட்னி அதிகாரிகள் எச்சரித்துள்ள நிலையில் மொரிசன் இவ்வாறு கூறியுள்ளார்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை சுமார் 124 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகினர். கடந்த 16 மாதங்களில் பதிவான மிக அதிக எண்ணிக்கையாக இது உள்ளது.

வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று எச்சரித்துள்ளார் அம்மாநில முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன்.

பெரும்பாலோருக்குத் தடுப்பூசி போடாத வரையில் நாம் வைரஸ் பரவலுக்கான சில கட்டுப்பாடுகளோடுதான் வாழ்ந்தாக வேண்டும் என்றும் அவர் கூறினார். அதுபோன்று விக்டோரியா மாநிலத்திலும் தொற்று எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. கடந்த புதனன்று 22ஆக இருந்த இந்த எண்ணிக்கை, 26ஆக உயர்ந்தது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...