விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்களில் விண்ணப்பத்தை சிங்களம் அல்லது ஆங்கில மொழியில் நிரப்ப முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
"விண்ணப்பம் சிங்களம் அல்லது ஆங்கிலத்தில் தெளிவான எழுத்தில் பூர்த்தி செய்யப்பட வேண்டும்" என்று ஆறு அம்ச துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய விண்ணப்பத்தில் கோரப்பட்ட விடயங்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அரசியலமைப்பை மீறியதாக கருதப்படும் இந்த விண்ணப்பம் நீதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
சிங்களம் மற்றும் தமிழ் இரண்டும் உத்தியோகபூர்வ மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அரசியலமைப்பின் அத்தியாயம் 4, பிரிவு 18 இன் 1 மற்றும் 2 கட்டுரைகள்,இலங்கையின் உத்தியோகபூர்வ மொழி சிங்களம் எனவும், தமிழும் ஒரு உத்தியோகபூர்வ மொழியெனவும், ஆங்கில மொழி இணைப்பு மொழி எனவும் அழைக்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
"தேசிய மொழிகள்" பற்றிய 19ஆவது பிரிவு "சிங்களமும் தமிழும் இலங்கையின் தேசிய மொழிகள்" எனக் கூறுகிறது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் மொழிகள் பற்றிய அத்தியாயம் 4, பிரிவு 18 முதல் 25 ஏ வரை விரிவாக இதுத் தொடர்பில் குறிப்பிடுகிறது.
இது "உத்தியோகபூர்வ மொழி", "தேசிய மொழிகள்", "நிர்வாக மொழிகள்", "சட்ட மொழி" மற்றும் "நீதி மொழி" ஆகியவற்றின் வகைப்பாடுகளையும் கொண்டுள்ளது.
தமிழில் சமாதான நீதவானாக விண்ணப்பம் கோருவதற்கு தடை!
T
The Leader Desk
ஜூலை 23, 2021 • 5:59 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்களில் விண்ணப்பத்தை சிங்களம் அல்லது ஆங்கில மொழியில் நிரப்ப முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சிங்களம் மற்றும் தமிழ் இரண்டும் உத்தியோகபூர்வ மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
- அரசியலமைப்பின் அத்தியாயம் 4, பிரிவு 18 இன் 1 மற்றும் 2 கட்டுரைகள்,இலங்கையின் உத்தியோகபூர்வ மொழி சிங்களம் எனவும், தமிழும் ஒரு உத்தியோகபூர்வ மொழியெனவும், ஆங்கில மொழி இணைப்பு மொழி எனவும் அழைக்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- "தேசிய மொழிகள்" பற்றிய 19ஆவது பிரிவு "சிங்களமும் தமிழும் இலங்கையின் தேசிய மொழிகள்" எனக் கூறுகிறது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

