Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

பௌத்த தேரர்களும் வீதிக்கு இறங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை! முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

T

The Leader Desk

ஜூலை 23, 2021 • 2:42 PM

பௌத்த தேரர்களும் வீதிக்கு இறங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை! முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்போது, அரசாங்கத்தின் செயற்பாடுகளோ, ரோம் நகரம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்த கதையாக மாறியுள்ளதாக, நாரஹென்பிட்டி அபயராமை விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
  • அதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
  • விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்போது, அரசாங்கத்தின் செயற்பாடுகளோ, ரோம் நகரம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்த கதையாக மாறியுள்ளதாக, நாரஹென்பிட்டி அபயராமை விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில், ரோம் நகரம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்த கதையாக இலங்கை அரசின் கதை மாறியுள்ளது.

ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம். இதனை நீளச் செய்ய வேண்டாம். அரசாங்கம் இதற்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும். நாட்டில் நாளுக்கு நாள் பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றன. இவற்றுக்கு தீர்வு வழங்க வேண்டியது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும்.

யாரும் தேவையின்றி வீதிக்கு இறங்குவதில்லை. அவர்களுக்கு ஏதோ பிரச்சினை காணப்படுகின்றது. அதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இது எதனை நோக்கி செல்கிறது என்பது எமக்குத் தெளிவாகின்றது. எமது நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலாகவே இது அமையும். பௌத்த தேரர்கள் மாத்திரமல்ல பொது மக்கள் அல்லது ஆலோசகர்கள் தெரிவிக்கும் எந்த கருத்துக்களையும் கேட்கும் நிலையில் அரசாங்கம் இல்லை.

அரசாங்கத்தை உருவாக்கியது பௌத்த தேரர்களே. நாங்கள் கூறுவதை இவர்கள் கேட்காவிடின், பொது மக்களின் கருத்துக்களுக்கு இவர்கள் செவிசாய்க்கவில்லையெனின், நாங்களும் பொது மக்களுடன் இணைந்து வீதியில் இறங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதை அரசாங்கத்திற்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

கடந்த அரசாங்கத்தில் காணப்பட்ட குறைபாடுகளால், இந்த அரசாங்கத்தை நாம் உருவாக்கினோம். எனினும் இவர்களும் சரியாக செயற்படுவதாக தெரியவில்லை. இந்த அரசாங்கத்திற்கு சரியான வழிகாட்டல்களை வழங்க ஆலோசகர்கள் இல்லை. இதுவே பிரச்சினை அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...