Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக செயற்படும் மனோகணேசன் கம்பனி! கிருஷாந்தன்

T

The Leader Desk

ஜூலை 22, 2021 • 2:17 PM

ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக செயற்படும் மனோகணேசன் கம்பனி! கிருஷாந்தன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எத்தனையோ விடயங்கள் மலையகச் சமூகத்தில் நடைபெறுகையில், ரிஷாத்பதியுதீனின் வீட்டில் நடைபெற்ற தீப்பற்றிக் கொண்ட விடயத்தை இவர்கள் தூக்கிப்பிடிப்பதேன்.?
  • இதற்கும் வக்கில்லாத இவர்கள் தான், தேவைக்கேற்றவாறு இவ்விடயத்தை திசை திருப்பிவிடுகின்றனர்.
  • மக்களைக் கவரும் உருப்படியான அரசியல் திட்டம் இவரிடம் இல்லை.
எழுத்து அளவு:

எத்தனையோ விடயங்கள் மலையகச் சமூகத்தில் நடைபெறுகையில், ரிஷாத்பதியுதீனின் வீட்டில் நடைபெற்ற தீப்பற்றிக் கொண்ட விடயத்தை இவர்கள் தூக்கிப்பிடிப்பதேன்.?

மக்களைக் கவரும் உருப்படியான அரசியல் திட்டம் இவரிடம் இல்லை. இதனால், அனுதாப அலையைத் திரட்டும் தந்திரோபாயத்தை இவர் கையிலெடுத்துள்ளனர்.

அப்பாவிச் சமூகத்தை அனுதாப உணர்வில் ஏமாற்றி, தனது வங்குரோத்து அரசியலை மறைக்கும் உபாயம்தான் மனோகணேசன் கூட்டத்தின் முதலைக் கண்ணீர்.

தொழில், உழைப்பு ரீதியாகச் சுரண்டப் படும் மலையக மக்களின் துயர்போக்குவதற்கு அறிக்கைகளைத்தவிர மனோகணேசன் கம்பனி எதைச் செய்தனர்?

டயகம சகோதரியின் தாயைப் போன்று எத்தனை தாய்மார்கள் இன்னும் அவதியுறுகின்றனர். இத்தாய்மார்களின் பொருளாதார இயலாமைகளை ஒழிக்க, தனது சொந்தப் பணத்தில் ஒரு ரூபாவையாவது மணோ கம்பனியினர் வழங்கியிருப்பார்களா? இதற்கும் வக்கில்லாத இவர்கள் தான், தேவைக்கேற்றவாறு இவ்விடயத்தை திசை திருப்பிவிடுகின்றனர்.

அரசியலில் சோபையிழந்து கிடக்கும் இவர்கள் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் இழந்த செல்வாக்கினை மீளப் பெற்றுக்கொள்வதற்காகவும் இ. தொ. காவிடம் கடந்த தேர்தலில் மூக்குடைப்பட்டதை மறைப்பதற்காகவும் இந்த விவகாரத்தை யுக்தியாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

மனோவுடன் கம்பனியுடன்  பழகும் எவரும் இனி, எட்டா உறவுடன்தான் இருக்கப்போகின்றனர். எட்டியுதைக்கும் உறவைவிடவும், ஒட்டா உறவு மேலென்பதும் இதற்காகத்தானோ?

"மச்சான் ரிஷாத், மச்சான் ரிஷாத்" எனப் பழகிய இவர்களது எச்சில்களும் படக்கூடாதென்று தான் இனிப்பழகப் போகின்றனர்.

எட்டி நின்று உதைக்கும் உறவை

விடவும் ஒட்டா உறவே இனியினிது.

கிருஷாந்தன் ஹட்டன்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...