Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

இரண்டு எதிர்க்கட்சிகளும் கதவுகளைத் திறக்கின்றன!

T

The Leader Desk

ஜூலை 21, 2021 • 6:27 PM

இரண்டு எதிர்க்கட்சிகளும் கதவுகளைத் திறக்கின்றன!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கட்சியை விட்டு வெளியேறிய எவருக்கும் கட்சி அதன் கதவுகளை மூடவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்திருந்தார்.
  • இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் ஒருவர், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு தமது கட்சியின் கதவு திறந்திருப்பதாகக் கூறியதோடு, ஒரு நிபந்தனை காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.
  • "ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலானவர்கள் எங்கள் நண்பர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள்” என விஜேவர்தன வார இறுதியில் கொழும்பில் உள்ள ஜானகி ஹோட்டலில் இடம்பெற்ற கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
எழுத்து அளவு:

கட்சியை விட்டு வெளியேறிய எவருக்கும் கட்சி அதன் கதவுகளை மூடவில்லை என  ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்திருந்தார்.

"ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலானவர்கள் எங்கள் நண்பர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள்” என விஜேவர்தன வார இறுதியில் கொழும்பில் உள்ள ஜானகி ஹோட்டலில் இடம்பெற்ற கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் ஒருவர், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு தமது கட்சியின் கதவு திறந்திருப்பதாகக் கூறியதோடு, ஒரு நிபந்தனை காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.

"ஊழலால் கறைபடியாத மற்றும் பிணைமுறி ஊழலில் பங்கேற்காத எந்தவொரு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினருக்கும் கதவுகள் திறந்திருக்கும்." என எதிர்க்கட்சித் தலைவரின் சமூக அபிவிருத்தி செயலாளரும், எதிர்க்கட்சியின் செயற்குழு உறுப்பினருமான ரெஹான் ஜயவிக்ரம ட்வீட் செய்துள்ளார்

ரெஹான் ஜயவிக்ரம  கட்சி மாறியதால் அவர் வெலிகம நகரத்தலைவர் பதவியை இழந்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேறு கட்சிகளின் உறுப்பினர்களுக்கு கதவுகள் திறந்திருக்கிறதா அல்லது திறந்திருக்கும் கதவுகள் வெளியேற முடியுமா என்பது குறித்து எந்தவொரு கருத்தையும் இரு கட்சிகளும் முன்வைக்கவில்லை.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...