Tamil Leader News
முக்கியம்
பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●அவுஸ்திரேலிய கமநலத்துறைக்கு சிரிப்பைக் கொண்டுவந்த யோத உலர்திராட்சைப் பிரதிமை●ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●
செய்திகள்

அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்கான ஊடக சந்திப்பு கூட சந்தர்ப்பவாத அரசியலின் பலியாகிவிட்டது - யூ.என்.பி.

T

The Leader Desk

ஏப்ரல் 9, 2020 • 4:02 PM

அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்கான ஊடக சந்திப்பு கூட சந்தர்ப்பவாத அரசியலின் பலியாகிவிட்டது - யூ.என்.பி.

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஊடக சந்திப்பு தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக கூறி யூ.என்.பி தேர்தல் திணைக்களத்தலைவருக்கு உத்தியோக பூர்வமாக கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
  • "நாட்டில் ஒரு பயங்கரமான தொற்றுநோய் பரவி வரும் நேரத்தில், அரசியல் வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் நாம் அனைவரும் நாட்டினதும் மக்களின் நலனுக்காக உழைக்க வேண்டும்.
  • இந்த அறிவிப்பை ஐக்கிய தேசிய கட்சியின் சட்டச் செயலாளர் ஜனாதிபதி ஆலோசகர் நிசங்க நானயக்கார எழுத்துபூர்வமாக அறிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

ஊடக சந்திப்பு தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக கூறி யூ.என்.பி தேர்தல் திணைக்களத்தலைவருக்கு உத்தியோக பூர்வமாக கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

இந்த அறிவிப்பை ஐக்கிய தேசிய கட்சியின் சட்டச் செயலாளர் ஜனாதிபதி ஆலோசகர் நிசங்க நானயக்கார எழுத்துபூர்வமாக அறிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டத்தை மீறியிருந்தாலும் கூட ...

"நாட்டில் ஒரு பயங்கரமான தொற்றுநோய் பரவி வரும் நேரத்தில், அரசியல் வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் நாம் அனைவரும் நாட்டினதும் மக்களின் நலனுக்காக உழைக்க வேண்டும்.

இத்தகைய சூழலில், மக்கள் சார்பாக நிவாரணம் விநியோகிக்கும் வழிமுறை அரசியல்மயமாக்கப்பட்டு அரசாங்கத்தின்  அரசியல் விம்பத்தை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிடுள்ளார்.

தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டிருக்கும் நேரத்தில், எதிர்க்கட்சியில் உள்ள எந்தக் குழுவும் நாட்டின் பேரழிவு சூழ்நிலையை எதிர்கொண்டு தங்கள் அரசியல் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல முடியவில்லை. இருப்பினும், இந்த குழுக்கள் அனைத்தும் நாட்டினதும் மக்களின் நலனுக்காகவும் எங்களால் முடிந்தவற்றை செய்துள்ளோம் .

இந்த சூழலில், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டணிக் கட்சிகளின் சில குழுக்கள் கொரோனா தொற்றுநோயை தங்கள் குறுகிய அரசியல் பிரச்சாரங்களுக்கு தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள் என அவர் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்கான ஊடக சந்திப்பு கூட சந்தர்ப்பவாத அரசியலின் பலியாகிவிட்டது - யூ.என்.பி. | Tamil Leader | We Lead the Nation