Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

சுகாதாரத் துறையினரின் விடுமுறைகள் இரத்து!

T

The Leader Desk

ஆகஸ்ட் 20, 2025 • 3:25 AM

சுகாதாரத் துறையினரின் விடுமுறைகள் இரத்து!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மற்றும் ஊடக அமைச்சில் வெற்றிடமாக உள்ள அனைத்து பதவிகளுக்கும் புதிய அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விடுமுறைகளை அங்கீகரிப்பதை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்த வேண்டியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • தற்போது படிப்படியாக அந்த குழுவினர் நாட்டிற்கு வரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அவர்களுக்கு பணியிடத்தில் வசதிகளை ஏற்படுத்துவது குறித்து மீண்டும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
  • கடந்த ஆண்டில் (2024) 1118 விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் சேவையை விட்டு விலகி வெளிநாடுகளில் பணிபுரிவதாகவும் அவர் கூறினார்.
எழுத்து அளவு:

மற்றும் ஊடக அமைச்சில் வெற்றிடமாக உள்ள அனைத்து பதவிகளுக்கும் புதிய அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விடுமுறைகளை அங்கீகரிப்பதை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்த வேண்டியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் ஊழியர்கள் விடுமுறை பெறுவதால், அமைச்சின் கடமைகளின் தன்மைக்கு ஏற்ப அத்தியாவசிய கடமைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த பொருளாதார நெருக்கடி காலத்தில், அரச ஊழியர்களுக்கு ஐந்து வருட விடுமுறை பெற்று வௌிநாட்டு வேலைகளில் ஈடுபட வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த சுற்றறிக்கையின்படி, இவ்வாறு விடுமுறை வழங்குவது இரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், தற்போது ஐந்து வருட விடுமுறை பெற்று வெளிநாட்டு வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மீண்டும் விடுமுறை காலத்தை நீடிக்க வேண்டாம் என்றும் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (19) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் அரசாங்க அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும், சுகாதார மற்றும் ஊடக அமைச்சருமான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் வினவியபோது, ஐந்து வருட விடுமுறை பெற்று வௌிநாடு சென்ற சுகாதாரத் துறையினரை மீண்டும் அழைக்க சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாகவும், கடந்த காலத்தில் நிலவிய பொருளாதாரப் பிரச்சினைகள், அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக அவர்கள் மீண்டும் நாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது படிப்படியாக அந்த குழுவினர் நாட்டிற்கு வரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அவர்களுக்கு பணியிடத்தில் வசதிகளை ஏற்படுத்துவது குறித்து மீண்டும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

சுகாதார ஊழியர்கள் வௌிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையானது தன்னிச்சையான, நோக்கமற்ற முடிவு என அகில இலங்கை தாதியர் சங்கம் குற்றம் சாட்டுகிறது.

சுகாதார செயலாளரின் இந்த தன்னிச்சையான முடிவு, நாட்டின் முழு வைத்தியசாலை கட்டமைப்பு, தேசிய நோய்த்தடுப்பு, நோயாளி பராமரிப்பு சேவைகள் உட்பட அனைத்து சேவைகளையும் மேலும் சீர்குலைக்க வழிவகுக்கும் என அதன் தலைவர் ரவீந்திர கஹதவஆரச்சி தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் (2024) 1118 விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் சேவையை விட்டு விலகி வெளிநாடுகளில் பணிபுரிவதாகவும் அவர் கூறினார்.

விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் அறிவிக்காமல் சேவையை விட்டு விலகி வௌிநாடுகளில் பணிபுரிவதாகவும், கடந்த 2023ஆம் ஆண்டில் 592 தாதியர்களும், 2024ஆம் ஆண்டில் மேலும் 592 தாதியர்களும் சேவையை விட்டு வௌியேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் (2024) சம்பளமில்லாத விடுமுறை பெற்று 487 தாதியர்கள், 388 வைத்தியர்கள், அறிவிக்காமல் சேவையை விட்டு வௌியேறிய 217 வைத்தியர்கள், அறிவிக்காமல் சேவையை விட்டு வௌியேறிய 26 விசேட வைத்திய நிபுணர்கள், விடுமுறை பெற்று வௌிநாடு சென்ற 22 விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சுகாதாரத் துறையினரின் விடுமுறைகள் இரத்து! | Tamil Leader | We Lead the Nation