Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

குழந்தைகளை ‘ஹூ…’ சொல்லவிடுங்கள்!

T

The Leader Desk

ஜூலை 20, 2025 • 2:54 AM

குழந்தைகளை ‘ஹூ…’ சொல்லவிடுங்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கூச்சலிடுவதற்கு வாய்ப்பளிக்குமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விளையாட்டு மற்றும் மருத்துவ ஆய்வுத் துறையின் சிரேஷ்ட வைத்தியர் புத்திக லொக்குகம்ஹேவா, பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
  • இந்த வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தினமும் சராசரியாக 180 நிமிடங்கள் உடல் செயல்பாடுகளில் ஈடுபட வாய்ப்பு அளிக்க வேண்டும்.
  • குழந்தையின் தூக்கம் எந்த நேரத்திலும் தடைபடக் கூடாது என்றும், குறைந்தபட்சம் குழந்தைகள் தினமும் 13 மணிநேரம் தூங்குவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் டாக்டர் கூறினார்.
எழுத்து அளவு:

கூச்சலிடுவதற்கு வாய்ப்பளிக்குமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விளையாட்டு மற்றும் மருத்துவ ஆய்வுத் துறையின் சிரேஷ்ட வைத்தியர் புத்திக லொக்குகம்ஹேவா, பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், உடல் உழைப்பு இல்லாததால் சிறு குழந்தைகளுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் கூறினார்.

இந்த வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தினமும் சராசரியாக 180 நிமிடங்கள் உடல் செயல்பாடுகளில் ஈடுபட வாய்ப்பு அளிக்க வேண்டும். குழந்தையின் தூக்கம் எந்த நேரத்திலும் தடைபடக் கூடாது என்றும், குறைந்தபட்சம் குழந்தைகள் தினமும் 13 மணிநேரம் தூங்குவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் டாக்டர் கூறினார்.

குறிப்பாக இன்றைய நாட்களில் டிஜிட்டல் திரைகளுக்கு குழந்தைகள் அடிமையாகி வருவதால், சரியான தூக்கம் இல்லாத காரணத்தால் சிறு குழந்தைகள் அமைதியற்ற நடத்தையை வெளிப்படுத்தி வருவதாக அவர் வலியுறுத்தினார்.

தினமும் சுமார் அறுபது நிமிடம் குழந்தைகளுக்கு பல்வேறு செயல்களில் ஈடுபடும் வாய்ப்பை பெற்றோர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் சிறு வயதிலிருந்தே இதுபோன்ற சுகாதார முறைகளை பின்பற்றி பழகினால் வயது முதிர்ந்த வயதில் ஏற்படும் நுரையீரல் சம்பந்தமான நோய்கள், இதய நோய்கள் வராமல் தடுக்கலாம் என்றும் மருத்துவர் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...