Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

ஆட்டோவில் வந்த நால்வரால் வத்தளையில் 43 வயது நபர் வெட்டிக் கொலை!

T

The Leader Desk

ஜூலை 20, 2025 • 2:20 AM

ஆட்டோவில் வந்த நால்வரால் வத்தளையில் 43 வயது நபர் வெட்டிக் கொலை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொலை செய்யப்பட்டவர் வசித்து வந்த இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் நேற்று (19) இரவு இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
  • உயிரிழந்தவர் கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 43 வயதானவர் என்பதுடன், சில மாதங்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
  • உயிரிழந்தவர், 2023 ஆம் ஆண்டு மஹாபாகே பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவியவர் என பொலிஸாரால் நடத்தப்பட்ட ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எழுத்து அளவு:

கொலை செய்யப்பட்டவர் வசித்து வந்த இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் நேற்று (19) இரவு இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முகமூடி அணிந்த நான்கு பேர் முச்சக்கர வண்டியில் பிரவேசித்து குறித்த நபரின் வீட்டிற்குள் நுழைந்து கூரிய ஆயுதங்களால் தாக்கி அவரை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை இடம்பெற்ற போது உயிரிழந்தவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளும் வீட்டில் இருந்துள்ளனர்.

உயிரிழந்தவர் கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 43 வயதானவர் என்பதுடன், சில மாதங்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்தவர், 2023 ஆம் ஆண்டு மஹாபாகே பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவியவர் என பொலிஸாரால் நடத்தப்பட்ட ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக எந்த சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், வத்தளை பொலிஸாரும், களனி பிரிவு குற்ற விசாரணை பணியகத்தின் அதிகாரிகளும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

MediaFile.jpeg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...