Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

செம்மணி மனிதப்புதைகுழி: 'உயிரிழந்தவர்களுக்கு நீதியும் வாழ்வோருக்கு உண்மையும் வேண்டும்!'

T

The Leader Desk

ஜூன் 20, 2025 • 3:33 PM

செம்மணி மனிதப்புதைகுழி: 'உயிரிழந்தவர்களுக்கு நீதியும் வாழ்வோருக்கு உண்மையும் வேண்டும்!'

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கோசத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கு பகிரங்கமாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
  • இந்தக் கோரிக்கை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு மற்றும் பல சமூக அமைப்புகள், உரிமைப் பாதுகாப்பாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பெண்கள் குழுக்கள், மீனவர் சங்கங்கள், விவசாய அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்களால் இன்று வெள்ளிக்கிழமை (20) முன்வைக்கப்பட்டது.
  • இதனுடன், வடமாநிலத்தில் தற்போதுவரை மூன்று முக்கியமான மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன: மன்னார் மனித புதைகுழி (2018) - பழைய சதோச வளாகத்தில் 323 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.
  • இதில் 28 சிறுவர்களின் எலும்புக்கூடுகளும், மெலிபன் பிஸ்கட் பை உள்ளிட்ட உணவுப் பொருள் சான்றுகளும் கிடைத்தன.
எழுத்து அளவு:

கோசத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கு பகிரங்கமாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு மற்றும் பல சமூக அமைப்புகள், உரிமைப் பாதுகாப்பாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பெண்கள் குழுக்கள், மீனவர் சங்கங்கள், விவசாய அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்களால் இன்று வெள்ளிக்கிழமை (20) முன்வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

1983ஆம் ஆண்டு தொடங்கி 2009ஆம் ஆண்டு வரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் மீது நடைபெற்ற படுகொலைகள், சட்டவிரோதமான கூட்டுக் கொலைகள், காணாமலாக்கங்கள் ஆகியவை இலங்கை அரசால், இந்திய இராணுவத்தால் மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கிய தமிழ் ஆயுதக்குழுக்களால் மேற்கொள்ளப்பட்டதாக வலியுறுத்தினர்.

குறிப்பாக பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் வெட்டப்பட்டும், எரிக்கப்பட்டும், சுட்டும் படுகொலை செய்யப்பட்டனர். இதனுடன், வடமாநிலத்தில் தற்போதுவரை மூன்று முக்கியமான மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன:

மன்னார் மனித புதைகுழி (2018) - பழைய சதோச வளாகத்தில் 323 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. இதில் 28 சிறுவர்களின் எலும்புக்கூடுகளும், மெலிபன் பிஸ்கட் பை உள்ளிட்ட உணவுப் பொருள் சான்றுகளும் கிடைத்தன.

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் (2023) - 52 எலும்புக்கூடுகள், விடுதலைப் புலிகள் போராளிகளின் சீருடைகள், உள்ளாடைகள், அங்கத்துவ இலக்க தகடுகள் ஆகியவை கிடைத்தன. பெரும்பாலானவை பெண்களுக்குரிய உடைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் – செம்மணி (2025) – 13ம் திகதி மாசி மாதம் முதன்முறையாக கட்டுமான பணிகளின் போது மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுவரை 19 எலும்புக்கூடுகள் அகழப்பட்டுள்ளன. இதில் 3 சிசுக்களுக்குரிய எலும்புக்கூடுகள் உள்ளன.

இவை தவிர, பல்வேறு நேரங்களில் முன்னாள் இராணுவ அதிகாரிகள், விசாரணைகளில் குறிப்பிட்ட இடங்களில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் எனக் கூறியுள்ளார்கள். முன்னாள் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, 1998 இல் செம்மணியில் 300க்கும் மேற்பட்டோர் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், மண்டைதீவு, திராய்க்கேணி, சத்துருக்கொண்டான், மற்றும் வந்தாறுமூலை பகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டனர்.

இந்த வரலாற்றுப் பின்னணியில், அரசாங்கம் தங்களது பக்கச்சார்பற்ற நிலைப்பாட்டை காட்டி, உண்மையை வெளிக்கொணர சுயாதீன விசாரணை முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நீண்டகாலமாக நீதிக்காக காத்திருப்பதாகவும், எம்மவர் உயிர்களுக்கு நீதி கிடைக்காமல் போவதை ஏற்க முடியாது எனவும் கூறப்பட்டது.

மேலும், இக்கோரிக்கை அரசாங்கம் மீது நீதியை நிலைநாட்டும் பொறுப்பை ஏற்க வேண்டிய அழுத்தத்தை உருவாக்கும் நோக்குடன் முன்வைக்கப்பட்டது. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...