Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

காசாவில் 14,000 குழந்தைகள் உயிரிழக்கக்கூடும் என்று ஐ.நா. எச்சரிக்கை!

T

The Leader Desk

மே 20, 2025 • 4:13 PM

காசாவில் 14,000 குழந்தைகள் உயிரிழக்கக்கூடும் என்று ஐ.நா. எச்சரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ,000 குழந்தைகள் வரை உயிரிழக்க நேரிடும் என்று, ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
  • மார்ச் 2ஆம் திகதி முதல் காசா பகுதிக்கு உதவிகள் செல்வதை முற்றிலுமாக நிறுத்த இஸ்ரேலிய அதிகாரிகள் முடிவு செய்தனர்.
  • பின்னர், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் கனடா உள்ளிட்ட 22 நாடுகள், காசா பகுதிக்கு உடனடியாக உதவிகளை அனுப்ப அனுமதிக்குமாறு இஸ்ரேலை கேட்டிருந்தன.
  • இந்நிலையில், 11 வாரங்களுக்குப் பிறகு காசா பகுதிக்குள் உதவிப் பொருட்களை ஏற்றிச் செல்லும் குறைந்த எண்ணிக்கையிலான லொறிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எழுத்து அளவு:

14,000 குழந்தைகள் வரை உயிரிழக்க நேரிடும் என்று, ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

மார்ச் 2ஆம் திகதி முதல் காசா பகுதிக்கு உதவிகள் செல்வதை முற்றிலுமாக நிறுத்த இஸ்ரேலிய அதிகாரிகள் முடிவு செய்தனர்.

பின்னர், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் கனடா உள்ளிட்ட 22 நாடுகள், காசா பகுதிக்கு உடனடியாக உதவிகளை அனுப்ப அனுமதிக்குமாறு இஸ்ரேலை கேட்டிருந்தன.

இந்நிலையில், 11 வாரங்களுக்குப் பிறகு காசா பகுதிக்குள் உதவிப் பொருட்களை ஏற்றிச் செல்லும் குறைந்த எண்ணிக்கையிலான லொறிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமையன்று, காசா பகுதிக்குள் குழந்தைகளுக்கான உணவு உட்பட மனிதாபிமான உதவிகளை ஏற்றிச்செல்ல, ஐந்து லொறிகளுக்கு மட்டுமே அனுமதி கிடைத்ததாக, ஐ.நாவின் மனிதாபிமான உதவித் தலைவர் டொம் பிளெட்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அடுத்த 48 மணி நேரத்திற்குள் காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்காவிட்டால், 14,000 குழந்தைகள் இறந்துவிடுவார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்திருந்தது.

இதனால், காசா பகுதிக்கு குழந்தைகளுக்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை ஏற்றிச்செல்ல, ஐக்கிய நாடுகள் சபையினால் 100 லொறிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...