Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

அமெரிக்கத் தூதரகம் விசேட அறிவிப்பு !

T

The Leader Desk

மே 20, 2025 • 3:52 PM

அமெரிக்கத் தூதரகம் விசேட அறிவிப்பு !

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கிறது.
  • கொழும்பு, இலங்கை : மே 20, 2025 – அமெரிக்கத் தூதரக அதிகாரிகளின் சமூக ஊடகக் கணக்குகளைப் போன்று ஆள்மாறாட்டம் செய்யும் போலியான சமூக ஊடகக் கணக்குகள் சமீபத்தில் அதிகரித்து வருவதை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அவதானித்துள்ளது.
  • அமெரிக்கத் தூதுவருக்கு முகநூல், இன்ஸ்டகிராம் அல்லது டெலிகிராமில் எவ்வித கணக்குகளும் இல்லையென்பதை கருத்திற்கொள்ளவும்.
எழுத்து அளவு:

தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கிறது.

கொழும்பு, இலங்கை : மே 20, 2025 – அமெரிக்கத் தூதரக அதிகாரிகளின் சமூக ஊடகக் கணக்குகளைப் போன்று ஆள்மாறாட்டம் செய்யும் போலியான சமூக ஊடகக் கணக்குகள் சமீபத்தில் அதிகரித்து வருவதை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அவதானித்துள்ளது. ஆள்மாறாட்டம் செய்பவர்களின் சமூக ஊடகக் கணக்குகளுடன் தொடர்பாடல்களை/ ஊடாட்டங்களை மேற்கொள்வதை அல்லது  அவற்றினூடாக வழங்கப்படும் தகவல்களை நம்புவதைத் தவிர்த்து, அமெரிக்கத் தூதரகத்தையோ அல்லது அதன் அதிகாரிகளையோ பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் எந்தவொரு கணக்கினதும் நம்பகத்தன்மையினை ஆராய்ந்து உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.

எமது தூதரகத்தின் மிகவும் துல்லியமான மற்றும் மிகவும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்கு, போலிகளைத் தவிர்த்து, நேரடியாக எமது மூலாதாரங்களை நாடவும். https://lk.usembassy.gov/ எனும் எமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தினைப் பார்வையிடுவதுடன், எமது தூதரகத்தின் உறுதிப்படுத்தப்பட்ட சமூக ஊடகக் கணக்குகளை மாத்திரம் பின்தொடரவும்:

  • தூதுவர் சங் அவர்களின் X தள கணக்கு: @USAmbSL
  • இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் X தள கணக்கு: @USEmbSL
  • இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் இன்ஸ்டகிராம்: @USEmbSL
  • இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முகநூல்: http://facebook.com/Colombo.USEmbassy

இலங்கையில் அமெரிக்காவின் பணிகள் பற்றிய துல்லியமான தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கு தூதுவர் ஜுலீ சங் அவர்களின் X தள கணக்கினைப் (@USAmbSL) பின்தொடருமாறு பொதுமக்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம். அமெரிக்கத் தூதுவருக்கு முகநூல், இன்ஸ்டகிராம் அல்லது டெலிகிராமில் எவ்வித கணக்குகளும் இல்லையென்பதை கருத்திற்கொள்ளவும். இவ்வாறான தளங்களில் அவரது பெயரில் ஏதேனும் கணக்குளை நீங்கள் அவதானித்தால் அது அவரது உண்மையான கணக்கு இல்லையென்பதை அறிந்து கொள்ளவும்!

அமெரிக்க வீசா சேவைகள் தொடர்பாக அமெரிக்கத் தூதரகத்தின் கொன்சியுலர் அதிகாரிகள் சமூக ஊடகத் தளங்கள் ஊடாகவோ அல்லது நேரடியான செய்திகள் மூலமாகவோ தனிநபர்களைத் தொடர்பு கொள்ள மாட்டார்கள் என்பதையும் நினைவிற்கொள்ளவும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...