Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

இ.தொ.காவின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

T

The Leader Desk

மார்ச் 20, 2025 • 4:46 PM

இ.தொ.காவின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
  • மற்றத் தொகுதிகளில் எமது நிலவரம் சிறப்பாக உள்ளது.
  • நுவரெலியா மாவட்டத்தில், 2025 உள்ளுராட்சி மன்றம் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை சேவல் சின்னத்தில் போட்டியிடுகின்றது.
எழுத்து அளவு:

தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும்தெரிவிக்கiயில்

“கொத்மலை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைகளுக்குரிய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ​​இதன் பின்னணியில் சூழ்ச்சி ஏதும் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

“எனவே இது சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். நல்ல முடிவு கிட்டும் என நினைக்கின்றோம். நீதிமன்றத்தை நம்புகின்றோம். மற்றத் தொகுதிகளில் எமது நிலவரம் சிறப்பாக உள்ளது. 'காங்கிரஸ் எப்போதும் கொடி கட்டி பறக்கும்” என்றார்.

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்குரிய வேட்பு மனுவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று தாக்கல் செய்தது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானால் வேட்பு மனு கையளிக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்டத்தில், 2025 உள்ளுராட்சி மன்றம் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை சேவல் சின்னத்தில் போட்டியிடுகின்றது. வலப்பனை பிரதேச சபைக்கு மாத்திரம் கதிரை சின்னத்தில் கூட்டணியாக களமிறங்குகின்றது.

நுவரெலியா மாநகரசபை, ஹட்டன்-டிக்கோயா நகரசபை, தலவாக்கலை-லிந்துலை நகரசபை , மஸ்கெலியா, நோர்வூட், கொட்டகலை, அக்கரபத்தனை, அம்பகமுவ, கொத்மலை, ஹங்குராகெத்த ஆகிய பிரதேச சபைகளுக்கு சேவல் சின்னத்தில் காங்கிரஸ் போட்டியிடுகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...