Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

பலஸ்தீனத்துக்கான தனி நாட்டை இலங்கை வரவேற்கிறது!

T

The Leader Desk

மார்ச் 20, 2025 • 2:32 PM

பலஸ்தீனத்துக்கான தனி நாட்டை இலங்கை வரவேற்கிறது!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கையின் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தெரிவித்துள்ளார்.
  • பாலஸ்தீன மக்களுடைய உரிமைக்காக நாங்கள் எழுந்து நிற்கின்றோம்.
  • இன்று பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

இலங்கையின் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பலஸ்தீனத்தில் இஸ்ரேல் பாரிய தாக்குதல்களை மேற்கொண்டுவருகிறது. பலஸ்தீன மக்களுக்கு எதிரான  இனப்படுகொலையாக இது கருதப்படுகிறது. "அம்னஸ்டி இன்டர்நேஷனல்"இன் தகவலின் படி பலஸ்தீனிய மக்களுக்கு எதிரான ஒரு அடாவடித்தனம் இது. இஸ்ரேலுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் வெளிப்படையாக இதனை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

“இந்த நாடு பலஸ்தீனத்திற்கு ஆதரவை வழங்குகிறது. சிநேகபூர்வமான மனப்பான்மை கொண்டிருக்கிறது. பாலஸ்தீன மக்களுடைய உரிமைக்காக நாங்கள் எழுந்து நிற்கின்றோம். கௌரவ சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க அவர்கள் பலஸ்தீனிய இலங்கை நட்புறவு சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். எனவே இலங்கை அரசாங்கம் எப்போதும் பலஸ்தீனிய மக்களுடன் இருக்கின்றது.

“அவர்களை மிகவும் இரக்கத்துடன் நோக்குகின்றது. 2012ல் கூட பலஸ்தீன ஜனாதிபதி நன்றி தெரிவித்திருந்தார். பலஸ்தீனத்திற்கான தனிநாட்டைக் கூட இலங்கை வரவேற்கின்றது. அதற்கு ஆதரவளிக்கின்றது. எனவே நான் இறுதியாக குறிப்பிடுகிறேன். சர்வதேச மனித உரிமைகளுக்கு இலங்கை ஆதரவளிக்கிறது. அவை அங்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் இலங்கை கூறுகிறது எனத் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பலஸ்தீனத்துக்கான தனி நாட்டை இலங்கை வரவேற்கிறது! | Tamil Leader | We Lead the Nation