Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

7 சதம் கதை பொய்; அதானி குழுமம் விளக்கம்!

T

The Leader Desk

மார்ச் 20, 2025 • 1:11 PM

7 சதம் கதை பொய்; அதானி குழுமம் விளக்கம்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பரவி வரும் வதந்திகளை இந்தியாவின் அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
  • இது தொடர்பாக அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிலோவாட் மணி நேரத்திற்கு 7 சதமாக விலையை மாற்றியமைக்க தனது நிறுவனம் ஒப்புக்கொண்டதாக கூறுவது முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது என சுட்டிக்காட்டியுள்ளது.
  • கடந்த பெப்ரவரியில் இலங்கையில் 442 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான காற்றாலை மின் உற்பத்தி முயற்சியில் இருந்து விலகுவதாக அதானி குழுமம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
  • அந்நாட்டின் அதிகாரிகள் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க முயன்றதைத் தொடர்ந்து இந்த முயற்சியில் இருந்து விலகுவதாக அதானி குழுமம் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தியது.
எழுத்து அளவு:

பரவி வரும் வதந்திகளை இந்தியாவின் அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது தொடர்பாக அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிலோவாட் மணி நேரத்திற்கு 7 சதமாக விலையை மாற்றியமைக்க தனது நிறுவனம் ஒப்புக்கொண்டதாக கூறுவது முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது என சுட்டிக்காட்டியுள்ளது.

ஒப்பந்தம் தொடர்பாக  இலங்கை அதிகாரிகளுடன் செய்துகொள்ளப்பட்ட அசல் உடன்படிக்கைக்கு நாங்கள் முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

மேலும் அதானி Green Energy SL Ltdஇன் முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் திட்ட அளவுருக்களில் எந்த மாற்றமும் இல்லை என்பதை மேலும் தெரிவிக்கிறோம்.

முன்மொழியப்பட்ட காற்றாலை மின் திட்டத்தில் இருந்து நிறுவனம் கெளரவத்துடன் விலகியுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் எப்போதாவது மறுபரிசீலனை செய்யும் பட்சத்தில் எந்தவொரு அபிவிருத்தி வாய்ப்பையும் எடுக்க எப்போதும் தயாராக இருப்பதாக அதானி குழுமம் மீண்டும் அந்த அறிவிப்பில் வலியுறுத்தியுள்ளது.

கடந்த பெப்ரவரியில் இலங்கையில் 442 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான காற்றாலை மின் உற்பத்தி முயற்சியில் இருந்து விலகுவதாக அதானி குழுமம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அந்நாட்டின் அதிகாரிகள் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க முயன்றதைத் தொடர்ந்து இந்த முயற்சியில் இருந்து விலகுவதாக அதானி குழுமம் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தியது.

2023 பெப்ரவரியில் இலங்கையின் முதலீட்டு சபை (BOI), அதானி கிரீன் எனர்ஜியின் $442 மில்லியன் காற்றாலை மின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

இதில் வடக்கு இலங்கையின் மன்னார் மற்றும் பூநகரியில் மின் நிலையங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

இலங்கை முதலீட்டுச் சபையின் 2023 அறிக்கையின்படி, மன்னார் காற்றாலை மின் நிலையம் 250 மெகாவாட் (மெகாவாட்) திறனில் இயங்க வேண்டும்.

அதேநேரத்தில், பூநகரியின் ஆலை 100 மெகாவாட்டிற்கு திட்டமிடப்பட்டது மற்றும் 2025இல் தொடங்க திட்டமிடப்பட்டது.

அப்போதிருந்து, இந்த திட்டம் சட்டரீதியான சவால்களை எதிர்கொண்டது, அதன் விவரங்கள் உயர் நீதிமன்ற மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...