Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

வவுனியாவில் மனைவியை மீட்டுத்தருமாறு கோரி 200 அடி உயர தொலைதொடர்பு கோபுரத்தில் ஏறி கணவன் போராட்டம்!

T

The Leader Desk

அக்டோபர் 27, 2021 • 4:28 PM

வவுனியாவில் மனைவியை மீட்டுத்தருமாறு கோரி 200 அடி உயர தொலைதொடர்பு கோபுரத்தில் ஏறி கணவன் போராட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்று (27) பிற்பகல் 3.30 மணியில் இருந்து 7 மணி வரை குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது.
  • இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவன் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 18 வயது யுவதியை காதலித்து வீட்டிற்கு அழைத்து வந்திருந்ததுடன், கடந்த ஜூலை மாதம் இருவரும் பதிவுத் திருமணமும் செய்திருந்தனர்.
  • இந்நிலையில் கடந்த 21 ஆம் திகதி குறித்த இளைஞனின் வீட்டிற்கு வானில் சென்ற பெண் வீட்டார் குறித்த இளைஞனின் உறவினர்களை தாங்கி விட்டு மனைவியை கொண்டு சென்றுள்ளதாக வவுனியா பொலிசில் கணவன் முறைப்பாடு செய்திருந்தார்.
  • வவுனியா நகர சபை தீயணைப்பு வாகனம் வருகை தந்து ஒலிபெருக்கு மூலம் குறித்த இளைஞர்களை கீழே இறங்கி வருமாறு அழைத்தனர்.
எழுத்து அளவு:

இன்று (27) பிற்பகல் 3.30 மணியில் இருந்து 7 மணி வரை குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது. இதனால் அப்பகுதியில் பதற்றமான நிலையும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்தது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவன் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 18 வயது யுவதியை காதலித்து வீட்டிற்கு அழைத்து வந்திருந்ததுடன், கடந்த ஜூலை மாதம் இருவரும் பதிவுத் திருமணமும் செய்திருந்தனர். இந்நிலையில் கடந்த 21 ஆம் திகதி குறித்த இளைஞனின் வீட்டிற்கு வானில் சென்ற பெண் வீட்டார் குறித்த இளைஞனின் உறவினர்களை தாங்கி விட்டு மனைவியை கொண்டு சென்றுள்ளதாக வவுனியா பொலிசில் கணவன் முறைப்பாடு செய்திருந்தார். இது தொர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

தனது மனைவி கடத்தப்பட்ட நிலையில் வாகன இலக்கம், வந்தவர்கள் விபரம் என்பன வழங்கியும் தனது மனைவியை இதுவரை பொலிசார் மீட்டுத் தரவில்லை எனவும், பொலிசார் பக்கச் சார்பாகவும், அசமந்தமாகவும் செயற்படுவதாக தெரிவித்தும் குறித்த இளைஞன் வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயம் முன்பாக கற்குழி பகுதியில் அமைந்துள்ள 200 அடி உயரமான தொலைதொடர்பு கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

தனது மனைவி வராவிடின், தற்கொலை செய்யப் போவதாகவும் தெரிவித்த நிலையில், குறித்த இளைஞனை மீட்க தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறிய உறிவினரான பிறிதொரு இளைஞன், போராட்டத்தில் ஈடுபட்டவருடன் இணைந்து தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் நிலைமையை அவதானித்துக் கொண்டிருந்தனர். வவுனியா நகர சபை தீயணைப்பு வாகனம் வருகை தந்து ஒலிபெருக்கு மூலம் குறித்த இளைஞர்களை கீழே இறங்கி வருமாறு அழைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞனுக்கு ஆதரவாக தொலைதொடர்பு கோபுரத்தில் ஏறி போராடிய இளைஞன் அப் பகுதி இளைஞர்களால் மீட்கப்பட்ட நிலையில் பொலிசார் அவரை அழைத்து சென்றிருந்தனர்.

மற்றைய இளைஞன் நீண்ட நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டும் தீர்வு கிடைக்காமையால், குறித்த இளைஞனை காப்பாற்ற கோரியும், பொலிசாரின் அசமந்ததைக் கண்டித்தும் இளைஞனின் உறவினர்கள் பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயம் முன்பாக ஏ9 வீதியை மறித்து சுமார் அரை மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி நாளை தீர்வுப் பெற்றுத் தருவதாக வழங்கிய வாக்குறுதியையடுத்து வீதி மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இதனையடுத்து பொலிசாரும் உறவினர்களும் இணைந்து ஒலிபெருக்கி மூலம் வாக்குறுதி வழங்கு தொலைதொடர்பு கோபுரத்தில் இருந்து இளைஞனை இறக்கினர். கீழே இறங்கிய இளைஞன் தனது மனைவியை மீட்டுத்தமாறு பொலிசாரிடம் மன்றாடியதுடன், மயக்கமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுமார் மூன்றரை மணித்தியாலயமாக நடைபெற்ற குறித்த போராட்டத்தால் அப்பகுதியில் பதற்ற நிலையயும் சுமார் அரை மணி நேரம் ஏ9 வீதி போக்குவரத்து தடையும் ஏற்பட்டிருந்தது. இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...