Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

தினசரி 200 க்கும் மேற்பட்ட கொவிட் மரணங்கள் பதிவாகலாம் நேற்று 111 மரணங்கள்!.

T

The Leader Desk

ஆகஸ்ட் 9, 2021 • 5:30 PM

தினசரி 200 க்கும் மேற்பட்ட கொவிட் மரணங்கள் பதிவாகலாம் நேற்று 111 மரணங்கள்!.

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதன்படி, நேற்று மாத்திரம் 111 பேர் உயிரிழந்துள்ளதுடன் நாட்டில் இலங்கையில் கடந்த 5 நாட்களில் 495 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் .
  • ஆகஸ்ட் - 111 மரணங்கள் 07.ஆகஸ்ட் - 94 மரணங்கள் 06.ஆகஸ்ட் - 98 மரணங்கள் 05.ஆகஸ்ட் -98 மரணங்கள் 04.ஆகஸ்ட் - 94 மரணங்கள் இன்னும் சில நாள்களில் நாட்டில் அன்றாடம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,000 ஐ கடக்கும்.
  • அத்துடன், நாளொன்றுக்கு இடம்பெறும் மரண எண்ணிக்கை ஆகக் குறைந்தது 200 ஆக இருக்கும் என்றும் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
  • நாட்டில் மேலும் 1,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

அதன்படி, நேற்று மாத்திரம் 111 பேர் உயிரிழந்துள்ளதுடன் நாட்டில்

இலங்கையில்  கடந்த 5 நாட்களில் 495 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் .

08.ஆகஸ்ட் - 111 மரணங்கள்

07.ஆகஸ்ட்  - 94 மரணங்கள்

06.ஆகஸ்ட்   - 98 மரணங்கள்

05.ஆகஸ்ட்    -98 மரணங்கள்

04.ஆகஸ்ட்    - 94 மரணங்கள்

இன்னும் சில நாள்களில் நாட்டில் அன்றாடம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,000 ஐ கடக்கும். அத்துடன், நாளொன்றுக்கு இடம்பெறும் மரண எண்ணிக்கை ஆகக் குறைந்தது 200 ஆக இருக்கும் என்றும் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு, தற்போது முகங்கொடுத்து கொண்டிருக்கும் நிலைமை, இன்னும் இரண்டொரு வாரங்களில் பன்மடங்குகளால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மேலும் 1,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 331,922 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 295,518 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,222 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வாரத்துக்குள் நாட்டில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளும் கொவிட் -19 சிகிச்சை வைத்தியசாலைகளாக மாற வாய்ப்புள்ளதாக, அரச மருந்தாக்கல் கூட்டுத் தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...