Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஈகுவடாரில் இடம்பெற்ற சிறைச்சாலை வன்முறையை தொடர்ந்து 2 ஆயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!

T

The Leader Desk

அக்டோபர் 2, 2021 • 3:59 AM

ஈகுவடாரில் இடம்பெற்ற சிறைச்சாலை வன்முறையை தொடர்ந்து 2 ஆயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதற்கிடையில், குயாகுவில் சிறைச்சாலையில் கடந்த செவ்வாய்கிழமை இருதரப்பு கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
  • இந்த கலவரத்தில் 118 கைதிகள் உயிரிழந்தனர்.
  • மேலும் 79 கைதிகள் படுகாயமடைந்தனர்.
  • ஈகுவடாரில் உள்ள சிறைச்சாலைகளில் சுமார் 39 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

இதற்கிடையில், குயாகுவில் சிறைச்சாலையில் கடந்த செவ்வாய்கிழமை இருதரப்பு கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் 118 கைதிகள் உயிரிழந்தனர். மேலும் 79 கைதிகள் படுகாயமடைந்தனர்.

ஈகுவடாரில் உள்ள சிறைச்சாலைகளில் சுமார் 39 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டதாலும், கைதிகளை கண்காணிக்க போதிய அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடாததும் இதுபோன்ற மோதல்கள் வன்முறையில் முடிய காரணமாகியுள்ளது.

இந்நிலையில், சிறையில் உள்ள 2 ஆயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய ஈகுவடார் அரசு முடிவு செய்துள்ளது. சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் பெண்கள், வயதானோர், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் பாதிக்கப்பட்டோரில் 2 ஆயிரம் பேரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் பாதுகாப்பை அதிகரித்து, மோதல்களை தவிர்க்கலாம் என்ற நோக்கத்தோடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...