Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பொலிஸார் வெட்கப்படும் நாட்டில் பெண்களுக்கு '1938'!

T

The Leader Desk

நவம்பர் 5, 2021 • 5:25 PM

பொலிஸார் வெட்கப்படும் நாட்டில் பெண்களுக்கு '1938'!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வயோதிப தாயொருவருக்குக்கூட வீதியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, பொலிஸாருக்குப் பொறுப்பான அமைச்சர் தர்மசங்கடத்தை வெளிப்படுத்தியதை அடுத்து, பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க அரசாங்கம் இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளது.
  • ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கு அமைய, 1938 என் பெண்களுக்கான இலவச தொலைபேசி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
  • "இந்த தொலைபேசி சேவை 24 மணி நேரமும் இயங்கும்.
  • பொலிஸுக்குள் பெண்கள் மற்றும் ஆண்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ள போதிலும், அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கையை அறிவிக்கவில்லை.
எழுத்து அளவு:

வயோதிப தாயொருவருக்குக்கூட வீதியில் நடமாட  முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, பொலிஸாருக்குப் பொறுப்பான அமைச்சர் தர்மசங்கடத்தை வெளிப்படுத்தியதை அடுத்து, பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க அரசாங்கம் இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கு அமைய, 1938 என் பெண்களுக்கான இலவச தொலைபேசி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பகல்வி அறநெறி பாடசாலை கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தலைமையில் பத்தரமுல்லை செத்சிறிபாய வளாகத்தில் இதன் ஆரம்ப நிகழ்ச்சி நடைபெற்றது.

cvbcvbf

"இந்த தொலைபேசி சேவை 24 மணி நேரமும் இயங்கும். நாட்டில் எங்கிருந்தும் 1938 என்ற இலவச இலக்கத்திற்கு அழைத்து பெண்களுக்கு ஏதேனும் துன்புறுத்தல்கள் ஏற்பட்டால்  உடனடியாகத் தெரிவிக்கலாம்."

இந்த நிகழ்வை ஒட்டி, 1938 இலவச மகளிர் உதவி இலக்கத்தின் தேசிய தரவுத்தளத்தை தொடங்குதல், தேசிய மகளிர் குழுவின் புதிய உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.

மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பகல்வி அறநெறி பாடசாலை கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் குமாரி ஜயசேகர, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, தேசிய மகளிர் குழுவின் தலைவி ஷிரந்தி பியறிஸ் திஸாநாயக்க மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

1938 என்ற இலக்கம் அறிமுகம் செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் பொலிஸுக்கு  பொறுப்பான அமைச்சர் "நம் நாட்டில் ஒரு வயதான பெண் கூட தனியாக வீதியில் செல்ல முடியாது" எனக் கூறியிருந்தார்.

"காலையில் எழுந்து பிரித் கேட்கும், இரவில் பிரித் கேட்டு உறங்கச் செல்லும், முழு நாழும் பௌத்த உபதேசங்களை கேட்க விகாரைக்குச் செல்லும்  நமது நாட்டில், பொலிஸார் மாத்திரமல்ல ல ஒட்டுமொத்த மக்களும் வெட்கப்பட வேண்டும்” என ரியர் அட்மிரல் வீரசேகர கொழும்பில் ஊடவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டிருந்தார்.

பொலிஸுக்குள்  பெண்கள் மற்றும் ஆண்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ள போதிலும், அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கையை அறிவிக்கவில்லை.

ஒரு நாளைக்கு நான்கு கற்பழிப்புகள்

இலங்கையில் இரண்டு மணித்தியாலங்களுக்கு ஒரு சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறுவதாகவும், நாளொன்றுக்கு குறைந்தது நான்கு பெண் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாகவும் நாட்டின் உயர்மட்ட பொலிஸ் அதிகாரி கடந்த வருடம் வெளிப்படுத்தினார்.

குற்றவியல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி 2019ஆம் ஆண்டின், குற்றப் புள்ளி விபரங்களை மேற்கோள்காட்டி 2020 ஆம் ஆண்டு இந்த தகவலை வெளியிட்டிருந்தார்.

பேஸ்புக் மூலம் வெளியிடப்பட்ட காணொளியில், 2019 ஆம் ஆண்டில் நாட்டில் 1,642 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இலங்கையில் ஒவ்வொரு ஆறு மணித்தியாலத்திற்கும் ஒரு பெண் கற்பழிக்கப்படுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்திருந்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...