Tamil Leader News
முக்கியம்
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சி!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்; இன்று விசாரணை மீள ஆரம்பம்!●அநுராதபுர அபிவிருத்தி வர்த்தமானியும் இந்திய முதலீடும்: உண்மை நிலை என்ன?●சீனாவின் 'சினொபெக்' எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் கைவிட பரிந்துரை!●மன நலத்துக்கு AIஐ நாடும் இளையோர்: இது தீர்வா அல்லது ஆபத்தா?●இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!●மின்னேரியா விபத்தில் விசேட வைத்திய நிபுணர் மரணம்!●எரிபொருள் வரிச் சுமையும் விநியோக நெருக்கடியும்: உண்மை நிலை என்ன?●தீபாவளியை முன்னிட்டு தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு திங்களன்று விடுமுறை!●தேயிலை - தேங்காய் டிஜிட்டல் மயமாக்கலால் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்குமா?●
செய்திகள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்; இன்று விசாரணை மீள ஆரம்பம்!

Menaka

Menaka

நவம்பர் 9, 2026 • 8:50 AM

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்; இன்று விசாரணை மீள ஆரம்பம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன, வெங்களப்புலி மற்றும் சம்பத் ஆகியோரைக் கொண்ட முப்பதவிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இம் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
  • அதற்கமைய, சட்டத்தரணிகளால் தமது எழுத்து மூலமான உரைகள் கடந்த வியாழக்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
  • தொடர்புடைய சட்டமூலத்தைச் சவாலுக்கு உட்படுத்தி உச்ச நீதிமன்றத்தில் 26 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தின் சில வாசகங்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று (09) உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன, வெங்களப்புலி மற்றும் சம்பத்  ஆகியோரைக் கொண்ட முப்பதவிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இம் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இம் மனுக்கள் கடந்த முறை அழைக்கப்பட்டபோது, தொடர்புடைய சட்டமூலம் தொடர்பாக முன்மொழியப்பட்ட திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை எழுத்து மூலமான உரைகள் (Written Submissions) வழியாகச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் மனுதாரர் தரப்புக்கு அறிவித்திருந்தது.

அதற்கமைய, சட்டத்தரணிகளால் தமது எழுத்து மூலமான உரைகள் கடந்த வியாழக்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து, இம் மனுக்கள் மீதான விசாரணை இன்று இரண்டாவது நாளாக மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தொடர்புடைய சட்டமூலத்தைச் சவாலுக்கு உட்படுத்தி உச்ச நீதிமன்றத்தில் 26 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...