Tamil Leader News
முக்கியம்
மின்னேரியா விபத்தில் விசேட வைத்திய நிபுணர் மரணம்!●எரிபொருள் வரிச் சுமையும் விநியோக நெருக்கடியும்: உண்மை நிலை என்ன?●தீபாவளியை முன்னிட்டு தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு திங்களன்று விடுமுறை!●தேயிலை - தேங்காய் டிஜிட்டல் மயமாக்கலால் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்குமா?●சில மணிநேரக் கனமழையால் கொழும்பு முடங்கிய விந்தை!●நுவரெலியா அஞ்சல் கட்டிடம் சுற்றுலா மையமாகிறது: பொதுமக்களின் பணத்திற்கு நீதி கிடைக்குமா?●இலங்கையின் நீல நண்டுக்கு உலகளாவிய சான்றிதழ்: ஆசியாவுக்கே முன்னுதாரணம்!●டயர் தரக் கட்டுப்பாட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டாலும் பரிசோதனை வசதிகளின்றி நெருக்கடி!●ABU மாநாட்டின் மூலம் சுற்றுலாத்துறைக்குக் கிடைத்த உலகளாவிய வாய்ப்பு!●உலகளாவிய தொழில்நுட்பப் பங்குகள் சரிவு: பிணைமுறைகளை நோக்கி முதலீட்டாளர்களின் கவனம்!●
செய்திகள்

மின்னேரியா விபத்தில் விசேட வைத்திய நிபுணர் மரணம்!

Menaka

Menaka

நவம்பர் 7, 2026 • 10:59 AM

மின்னேரியா விபத்தில் விசேட வைத்திய நிபுணர் மரணம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொலன்னறுவை வைத்தியசாலைக்கு இணைக்கப்பட்ட விசேட வைத்திய நிபுணர் ஒருவர், வெள்ளிக்கிழமை (06) மின்னேரியில் தான் ஓட்டிச் சென்ற கார் எதிரே வந்த டிப்பர் லொறியுடன் மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளார்.
  • பொலன்னறுவை - ஹபரணை பிரதான வீதியில் 39 ஆவது கிலோமீட்டர் தூண் அருகே மாலையில் இக் விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
  • எனினும், 50 வயதுடைய விசேட வைத்திய நிபுணர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.
எழுத்து அளவு:

பொலன்னறுவை வைத்தியசாலைக்கு இணைக்கப்பட்ட விசேட வைத்திய நிபுணர் ஒருவர், வெள்ளிக்கிழமை (06) மின்னேரியில் தான் ஓட்டிச் சென்ற கார் எதிரே வந்த டிப்பர் லொறியுடன் மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பொலன்னறுவை - ஹபரணை பிரதான வீதியில் 39 ஆவது கிலோமீட்டர் தூண் அருகே மாலையில் இக் விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மின்னேரியிலிருந்து ஹபரணை நோக்கிச் சென்ற கார், எதிர் திசையில் வந்த டிப்பர் லொறியுடன் மோதியுள்ளது.

விபத்தில் இரண்டு வாகனங்களின் சாரதிகளும் காயமடைந்து ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், 50 வயதுடைய விசேட வைத்திய நிபுணர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.

உயிரிழந்தவர் பொலன்னறுவை, புதிய நகர் (New Town) பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

டிப்பர் லொறியின் சாரதி மேலதிக சிகிச்சைகளுக்காகப் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மின்னேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...