Tamil Leader News
முக்கியம்
மின்னேரியா விபத்தில் விசேட வைத்திய நிபுணர் மரணம்!●எரிபொருள் வரிச் சுமையும் விநியோக நெருக்கடியும்: உண்மை நிலை என்ன?●தீபாவளியை முன்னிட்டு தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு திங்களன்று விடுமுறை!●தேயிலை - தேங்காய் டிஜிட்டல் மயமாக்கலால் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்குமா?●சில மணிநேரக் கனமழையால் கொழும்பு முடங்கிய விந்தை!●நுவரெலியா அஞ்சல் கட்டிடம் சுற்றுலா மையமாகிறது: பொதுமக்களின் பணத்திற்கு நீதி கிடைக்குமா?●இலங்கையின் நீல நண்டுக்கு உலகளாவிய சான்றிதழ்: ஆசியாவுக்கே முன்னுதாரணம்!●டயர் தரக் கட்டுப்பாட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டாலும் பரிசோதனை வசதிகளின்றி நெருக்கடி!●ABU மாநாட்டின் மூலம் சுற்றுலாத்துறைக்குக் கிடைத்த உலகளாவிய வாய்ப்பு!●உலகளாவிய தொழில்நுட்பப் பங்குகள் சரிவு: பிணைமுறைகளை நோக்கி முதலீட்டாளர்களின் கவனம்!●
செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு திங்களன்று விடுமுறை!

Menaka

Menaka

நவம்பர் 7, 2026 • 10:42 AM

தீபாவளியை முன்னிட்டு தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு திங்களன்று விடுமுறை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாளை (08) கொண்டாடப்படவுள்ள தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மத்திய, ஊவா, மேல் மற்றும் சபரகமுவ ஆகிய மாகாணங்களிலுள்ள அனைத்துத் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (09) சிறப்பு விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • தொடர்புடைய மாகாணங்களின் ஆளுநர்களால் இது குறித்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • இருப்பினும், திங்கட்கிழமை வழங்கப்படும் இந்தச் சிறப்பு விடுமுறையை ஈடுசெய்வதற்காக இம் மாதம் 14 ஆம் திகதி சனிக்கிழமை குறித்த தமிழ் மொழி மூலப் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் வழக்கம்போல் நடத்தப்பட வேண்டும் எனவும் தொடர்புடைய அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

நாளை (08) கொண்டாடப்படவுள்ள தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மத்திய, ஊவா, மேல் மற்றும் சபரகமுவ ஆகிய மாகாணங்களிலுள்ள அனைத்துத் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (09) சிறப்பு விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தோட்டப்பயிர்கள் மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களால் விடுக்கப்பட்ட விசேட கோரிக்கைக்கு அமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய மாகாணங்களின் ஆளுநர்களால் இது குறித்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும், திங்கட்கிழமை வழங்கப்படும் இந்தச் சிறப்பு விடுமுறையை ஈடுசெய்வதற்காக இம் மாதம் 14 ஆம் திகதி சனிக்கிழமை குறித்த தமிழ் மொழி மூலப் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் வழக்கம்போல் நடத்தப்பட வேண்டும் எனவும் தொடர்புடைய அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

#Deepavali
Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...