Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

29.6% இலங்கை இளைஞர்கள் தவறான பழக்கங்களுக்கு அடிடையாகி வாழ்க்கையை இழக்கும் நிலை!

T

The Leader Desk

ஜூன் 19, 2025 • 2:54 AM

29.6% இலங்கை இளைஞர்கள் தவறான பழக்கங்களுக்கு அடிடையாகி வாழ்க்கையை இழக்கும் நிலை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மது அருந்துவதாகவும் சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்துகிறது.
  • தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
  • கணக்கெடுப்பின் முடிவுகளின்படி, கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 36.5 சதவீதம் பேர் புகைபிடிப்பதை விட்டுவிட்டனர்.
  • மேலும், தற்போதைய புகைப்பிடிப்பவர்களில் 20.9 சதவீதம் பேர் கணக்கெடுப்பை நடத்தும் போது தங்கள் புகைபிடிப்பைக் குறைத்துள்ளனர்.
எழுத்து அளவு:

மது அருந்துவதாகவும் சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்துகிறது.

“இப்பழக்கங்களுக்கான பெரும்பாலான ஆரம்பப் புள்ளிகள், சமூகத்திலிருந்தே  ஆரம்பித்திருக்கின்றன. சகாக்களின் அழுத்தங்கள் மற்றும் செல்வாக்கு போன்றன இதற்கு பெரும் காரணியாகியுள்ளன என்று, ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. ஊடகங்கள் மற்றும் பிற தளங்கள் மூலம் புகையிலை துறையின் அனைத்து வகையான விளம்பரங்களும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களிடையே தங்கள் தயாரிப்புகளின் நேர்மறையான படத்தை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன” என்று, மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கடந்த பத்தாண்டுகளில் ஒட்டுமொத்தமாக மது அருந்துதல் போக்கு சரிவையே காட்டுகிறது. 2022ஆம் ஆண்டிற்குப் பிறகு மொத்த மதுபான  உற்பத்தியில் காணப்பட்ட சரிவு மற்றும் கலால் வரி வருவாயில் தொடர்ச்சியான அதிகரிப்பு, மதுபானப் பொருட்களின் மீதான உற்பத்தி வரிகளில் அரசாங்கத்தின் தொடர்ச்சியான அதிகரிப்புகளால் இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று. தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

கணக்கெடுப்பின் முடிவுகளின்படி, கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 36.5 சதவீதம் பேர் புகைபிடிப்பதை விட்டுவிட்டனர். மேலும், தற்போதைய புகைப்பிடிப்பவர்களில் 20.9 சதவீதம் பேர் கணக்கெடுப்பை நடத்தும் போது தங்கள் புகைபிடிப்பைக் குறைத்துள்ளனர். கருத்துக்கணிப்பை நடத்தும் போது, மேலும் 27.9 சதவீதம் பேர் மது அருந்துவதை நிறுத்துவதில் வெற்றி பெற்றனர்.

மத்திய வங்கி தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்களின்படி, 2023ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட சிகரெட்டுகள் மீதான கலால் வரியில் 20 சதவீதம் அதிகரிப்பு, சிகரெட் கலால் வரி காரணமாக அரசாங்க வருவாயில் 7.7 பில்லியன் ரூபாய் அதிகரிப்பிற்கு பங்களித்துள்ளது. அதே நேரத்தில், சிகரெட் உற்பத்தி 521.5 (சிகரெட் அடிப்படையில்) மில்லியன் அளவால் குறைந்துள்ளது. இது, முந்தைய ஆண்டை விட 18 சதவீதம் குறைவாகும்.

அத்துடன், கல்வி நிறுவனங்களின் 100 மீற்றர் சுற்றளவில் புகையிலை விற்பனையைத் தடை செய்தல், NATA சட்டத்தை திறம்பட செயல்படுத்துதல், தற்காலிக மதுபான உரிமங்களை வழங்குவதை நிறுத்துதல் மற்றும் சுற்றுலாத் துறையின் சாக்குப்போக்கின் கீழ் மதுபான உரிமங்களை வழங்குவதை நிறுத்துதல் ஆகியவை எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என்று ADIC கூறுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...