Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை உள்ளடக்கி இலங்கையில் பாதாள உலகக் கோஷ்டி உருவாக்கம்!

T

The Leader Desk

மே 19, 2025 • 5:10 AM

சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை உள்ளடக்கி இலங்கையில் பாதாள உலகக் கோஷ்டி உருவாக்கம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொழும்பின் பிரதான போதைப்பொருள் வர்த்தகர்களில் ஒருவராகவும் பாதாள உலகக் கோஷ்டி செயற்பாட்டாளராகவும் கருதப்படும் பழனி ரிமோஷன் என்பவரினால் இவ்வாறு பாதாள உலகக் கோஷ்டி உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
  • கடந்த 16ஆம் திகதி கொட்டாஞ்சேனை சுமித்ரா ராம வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 42 வயதான நபர் ஒருவரும் அவரது 70 வயதான பெரியம்மாவும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • இந்த நபர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து கொட்டஞ்சனை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய மற்றும் அதற்கு உதவிய இருவரும் 17 மற்றும் 18 வயதுடைய சிறுவர்கள் என தெரியவந்துள்ளது.
  • இந்த இரண்டு சந்தேக நபர்களும் கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது இந்த விசாரணைகளின் போது 17 வயதான சிறுவன் தாம் பழனி ரிமோஷன் குழுவைச் சேர்ந்தவர் எனவும் அவரது வழிகாட்டலில் இந்த துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

கொழும்பின் பிரதான போதைப்பொருள் வர்த்தகர்களில் ஒருவராகவும் பாதாள உலகக் கோஷ்டி செயற்பாட்டாளராகவும் கருதப்படும் பழனி ரிமோஷன் என்பவரினால் இவ்வாறு பாதாள உலகக் கோஷ்டி உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

18 வயதுக்கு குறைந்த இளையவர்கள் இந்த படையணியில் இணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 16ஆம் திகதி கொட்டாஞ்சேனை சுமித்ரா ராம வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 42 வயதான நபர் ஒருவரும் அவரது 70 வயதான பெரியம்மாவும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நபர் புகுடு கண்ணா என்ற பாதாள உலகக் குழு தலைவரின் சகாக்களில் ஒருவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் ஓராண்டுக்கு முன்னதாக ஜிந்துபிட்டி பகுதியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கின் சந்தேக நபர் என்பதுடன் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு இருப்பிட வசதிகளை செய்து கொடுத்தார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நபர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து கொட்டஞ்சனை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய மற்றும் அதற்கு உதவிய இருவரும் 17 மற்றும் 18 வயதுடைய சிறுவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த இருவரும் சட்டத்தரணிகள் ஊடாக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முன்னிலை ஆகியிருந்தனர்.

இந்த இரண்டு சந்தேக நபர்களும் கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது இந்த விசாரணைகளின் போது 17 வயதான சிறுவன் தாம் பழனி ரிமோஷன் குழுவைச் சேர்ந்தவர் எனவும் அவரது வழிகாட்டலில் இந்த துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாதாள உலக வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தான் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். பழனி ரிமோஷன் என்ற நபர், சிறுவர்களை குற்றச்செயல்களில் பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் கைதான மற்ற 18 வயதாக சிறுவன் இளைஞன் துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும் ஏனைய தரப்புகளையும் இணைப்பினை ஏற்படுத்தியவர் என தெரியவந்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...