Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

மனம்பேரி - இசைப்பிரியா படுகொலைகளுக்கு நீதி எங்கே?

T

The Leader Desk

மார்ச் 19, 2025 • 8:39 AM

மனம்பேரி - இசைப்பிரியா படுகொலைகளுக்கு நீதி எங்கே?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செய்யப்பட்ட பிரேமாவதி மனம்பேரி மற்றும் இசைப்பிரியா உள்ளிட்டவர்களுக்கான நீதி குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பினார்.
  • இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் "பட்டலந்த என்பது, 1988 - 1989 காலப்பகுதியில் நாட்டில் இருந்த ஜேவிபி போராளிகளை கைது செய்து சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இடம்.
  • அந்தவகையில், கதிர்காமத்து அழகி மனம்பேரி, சொந்த சகோதரர்களான இராணுவத்தினரால் ஆடைகள் களைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
எழுத்து அளவு:

செய்யப்பட்ட பிரேமாவதி மனம்பேரி மற்றும் இசைப்பிரியா உள்ளிட்டவர்களுக்கான நீதி குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றும் போது  மேற்கண்ட விடயம் தொடர்பில் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

"பட்டலந்த என்பது, 1988 - 1989 காலப்பகுதியில் நாட்டில் இருந்த ஜேவிபி போராளிகளை கைது செய்து சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இடம். அது தொடர்பிலான ஆணைக்குழு அறிக்கை இவ்வளவு காலம் கிடப்பில் இருந்து தற்போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச நேர்காணலினால் பேசுபொருளாகியுள்ளது.

“இந்த படுகொலைகள் தொடர்பாக, அக்காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை வரை சமர்ப்பித்திருந்தார். ஆனால், அப்போதும் இதற்கான தீர்வுகள் எட்டப்படவில்லை.

“சந்திரிகா காலத்திலும் கண்டுகொள்ளப்படாத இவ்விடயம் தற்போது, கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருப்பது நியாய பூர்வமானது. அந்தவகையில், கதிர்காமத்து அழகி மனம்பேரி, சொந்த சகோதரர்களான இராணுவத்தினரால் ஆடைகள் களைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இது உலக வரலாற்றிலேயே மிக கேவலமான ஒரு பதிவு.

“அவ்வாறான நிலையில் அதற்கு நீதி பல காலமாக கோரப்பட்டு வருகின்றது. அதேபோல தமிழ் தேசிய இனம் சார்ந்த இசைப்பிரியா மற்றும் கிருஷாந்தி போன்றவர்கள் பாலியல் கொடுமைகளுக்கு பின்பால் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள்.

“அவர்களுக்கான நீதி விசாரணைகளை நாங்கள் பல இடங்களில் கோருகின்றோம். தமிழர்களுக்கு நடந்தது மிகப்பெரிய இனப்படுகொலை. ஆனால், சிங்கள மக்களின் எழுச்சி, கிளர்ச்சிகளுக்கு எதிராக இந்த வதைமுகாம்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன” என தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மனம்பேரி - இசைப்பிரியா படுகொலைகளுக்கு நீதி எங்கே? | Tamil Leader | We Lead the Nation