Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

09 மாதங்களின் பின் இன்று பூமிக்கு திரும்பிய சுனிதா, வில்மோரின் உடல்நிலை எப்படி உள்ளது?

T

The Leader Desk

மார்ச் 19, 2025 • 5:11 AM

09 மாதங்களின் பின் இன்று பூமிக்கு திரும்பிய சுனிதா, வில்மோரின் உடல்நிலை எப்படி உள்ளது?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சுனிதா மற்றும் வில்மோர் இருவரின் உடல்நிலை குறித்து நாசா தகவல் வெளியிட்டுள்ளது.
  • கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் தவித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் இன்று அதிகாலை 3:27 மணிக்கு பூமிக்கு பாதுகாப்பாகத் திரும்பினர்.
  • இந்த நிலையில் நாசாவின் வணிகக் குழு திட்ட மேலாளர் ஸ்டீவ் ஸ்டிச் செய்தியாளர்களை சந்தித்தார்.
  • பூமியின் ஈர்ப்பு விசைக்கு ஏற்ப அவர்களின் உடல்கள் மீண்டும் மாறத் தொடங்குவதால், நாசாவின் 45 நாட்கள் மீட்புத் திட்டத்திற்கு பிறகு அவர்கள் மீண்டும் தங்களை சாதாரணமாக உணர்வார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

சுனிதா மற்றும் வில்மோர் இருவரின் உடல்நிலை குறித்து நாசா தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் தவித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் இன்று அதிகாலை 3:27 மணிக்கு பூமிக்கு பாதுகாப்பாகத் திரும்பினர்.

286 நாட்களுக்கு பிறகு பூமியின் ஈர்ப்பு விசைக்குள் மீண்டும் நுழைந்த பிறகு சுனிதா மற்றும் வில்மோர் இருவரின் உடல்நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் இன்று டிராகன் விண்கலத்தில் இருந்து வெளியேறிய வீரர்கள், நிற்க முடியாத நிலையில் ஸ்ட்ரெச்சரில் ஏற்றி மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் நாசாவின் வணிகக் குழு திட்ட மேலாளர் ஸ்டீவ் ஸ்டிச் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ”தரையிறங்கிய பிறகு விண்வெளி வீரர்கள் அனைவரும் மிகவும் ஆரோக்கியமாக உள்ளனர். பூமியின் ஈர்ப்பு விசைக்கு ஏற்ப அவர்களின் உடல்கள் மீண்டும் மாறத் தொடங்குவதால், நாசாவின் 45 நாட்கள் மீட்புத் திட்டத்திற்கு பிறகு அவர்கள் மீண்டும் தங்களை சாதாரணமாக உணர்வார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

விண்வெளியில் நீண்ட நாட்கள் இருந்ததால் சுனிதா மற்றும் வில்மோர் இருவருக்கும் தசைச் சிதைவு முதல் இருதயக் கோளாறு வரை என குறிப்பிடத்தக்க உடலியல் சவால்கள் ஏற்பட்டிருக்கும். அவர்களின் உடல்நிலையானது அடுத்த சில வாரங்களுக்கு நாசா விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கும்.

WhatsApp-Image-2025-03-19-at-09.54.06_f3d910fd.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...