Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

‘வலுவான பொருளாதாரத்துக்கான முதல் அடி வைக்கப்பட்டுள்ளது’

T

The Leader Desk

பிப்ரவரி 19, 2025 • 2:26 PM

‘வலுவான பொருளாதாரத்துக்கான முதல் அடி வைக்கப்பட்டுள்ளது’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொழும்பு சினமன் லைப் ஹோட்டலில் இன்று (19) நடைபெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னரான கருத்தாடல்("POST BUDGET FORUM 2025") இல் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
  • கடன் மறுசீரமைப்பு மூலம் கிடைத்த மூன்று வருட சலுகைக் காலத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி, 2028 ஆம் ஆண்டுக்குள் சரியான பொருளாதார முகாமைத்துவத்தின் மூலம் கடன் திருப்பிச் செலுத்தும் திறனை அடைய அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும் ஜனாதிபதி அநுர திசாநாயக்க தெரிவித்தார்.
  • அரசியல் அதிகாரத்தை ஊழல் இல்லாத இடமாக மாற்றியுள்ளதாகவும், இலஞ்சம் கொடுக்காத கலாச்சாரத்தை உருவாக்குவது குடிமக்களின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
எழுத்து அளவு:

நமது நாடு, தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட  தகுதிகாண் காலத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்த சூழ்நிலையில் ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான அடிப்படை நடவடிக்கை  இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக எடுத்துள்ளதாகக் கூறினார்.

கொழும்பு சினமன் லைப் ஹோட்டலில் இன்று (19) நடைபெற்ற 2025  வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னரான கருத்தாடல்("POST BUDGET FORUM 2025") இல் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

கடன் மறுசீரமைப்பு மூலம் கிடைத்த மூன்று வருட சலுகைக் காலத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி, 2028 ஆம் ஆண்டுக்குள் சரியான பொருளாதார முகாமைத்துவத்தின் மூலம் கடன் திருப்பிச் செலுத்தும் திறனை அடைய அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும் ஜனாதிபதி அநுர திசாநாயக்க தெரிவித்தார்.

வங்குரோத்தடைந்த ஒரு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப பல உலகநாடுகளுக்கு ஒரு தசாப்தம் வரை சென்றாலும், இலங்கை அதிலிருந்து மீள்வதற்கு ஒரு தசாப்தத்திற்கும் குறைவான காலமே செல்லும் என்று கணிப்பிட முடியும் என்றும்  ஜனாதிபதி இங்கு தெரிவித்தார். 

இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அரச வருவாயை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.1% ஆக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும், முன்னுரிமை அடிப்படையில் நிதியை செலவிடுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பொருளாதாரத்தை விஸ்தரித்து பொருளாதாரத்தை கிராமங்களுக்குக் கொண்டு செல்வதன் மூலமும், குடிமக்களைப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் குடிமக்கள்   பயனடையும் திறனை அதிகரிக்க முடியும் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.

பொருளாதாரத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட குழுக்களை மீண்டும் பொருளாதாரத்திற்குள் கொண்டு வருவதன் மூலம் கிராம மட்டத்தில் சிறிய பொருளாதார அலகுகளை உருவாக்க தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோரை உருவாக்குவதற்கான ஆர்வத்தை நாட்டில் உருவாக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.

கைத்தொழில்துறைக்கு உதவுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதன் மூலம் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதே அரசாங்கத்தின் குறிக்கோள் என்றும் தெரிவித்தார்.

கிராமப்புற வறுமையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக கல்விக்காக இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பாடசாலைக் கட்டமைப்பில் மனித மற்றும் பௌதீக வளங்களை மறுசீரமைக்க எதிர்பார்ப்பதாகவும்  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இது ஒற்றைத் திசை கல்விக்குப் பதிலாக பல் திசைக் கல்வியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரச செலவின முகாமைத்துவம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதோடு அரச சேவைக்காக அதிக செலவு  மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, அரச நிறுவனங்களின் செலவினங்களை மறுபரிசீலனை செய்யும்  எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் அதிகாரத்தை ஊழல் இல்லாத இடமாக மாற்றியுள்ளதாகவும், இலஞ்சம் கொடுக்காத கலாச்சாரத்தை உருவாக்குவது குடிமக்களின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்க புதிய வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட எதிர்பார்ப்பதாகவும், இந்த ஆண்டு அதிக ஏற்றுமதி வருவாயை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

துறைமுக மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த ஆண்டு திறமையான கொள்கலன் பரிமாற்ற மையத்தை உருவாக்குவதில் வரவு செலவுத் திட்டதின் ஊடாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்காக நகர வர்த்தக  நாமத் திட்டங்கள் (City Brand)  செயல்படுத்தப்பட்டு வருவதோடு அனுராதபுரம், யாபஹுவ மற்றும் யாழ்ப்பாணம் போன்ற நகரங்களை முன்னேற்றுவதற்கான திட்டங்களும் வகுக்கப்படுகின்றன.

நாட்டின் பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு இராஜதந்திர சேவையைப் பயன்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, வர்த்தக முகாமைத்துவம் தொடர்பான முதுமானி ஆய்வாளர் சங்கத்தின் தலைவர் சுராஜ் ரதம்பொல உட்பட ஆய்வாளர்கள் மற்றும் வர்த்தகத் துறைசார்ந்தோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Forum_5.jpg

 

Forum_3.jpg

 

Forum_4.jpg

 

Forum_2.jpg

 

Forum_1.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

‘வலுவான பொருளாதாரத்துக்கான முதல் அடி வைக்கப்பட்டுள்ளது’ | Tamil Leader | We Lead the Nation