Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

வடக்குக்கு ஏன் அதிக கரிசனை?

T

The Leader Desk

பிப்ரவரி 19, 2025 • 5:06 AM

வடக்குக்கு ஏன் அதிக கரிசனை?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாகாணங்களுக்கு இவ்வாறு பாரிய நிதி ஒதுக்கப்படவில்லை.
  • பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
  • ஆகவே தற்போது அதிகரித்துள்ள கொடுப்பனவை மேலும் அதிகரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
  • எமது அரசாங்கத்தில் முன்பிள்ளை பாடசாலை ஆசிரியர்களின் சம்பளம் 2000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.
எழுத்து அளவு:

மாகாணங்களுக்கு இவ்வாறு பாரிய நிதி ஒதுக்கப்படவில்லை. அனைத்து மாகாணங்களுக்கும்  அபிவிருத்திக்கு சமமான வகையில் நிதி ஒதுக்க வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஐசிங் பூசிய கேக்கினை முன்வைத்துள்ளார்.  குறிப்பிட்டுள்ள  திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் இல்லையேல் பிரச்சினைகள் மாத்திரமே மிகுதியாகும்.

நலன்புரி கொடுப்பனவுகள் அதிகரித்துள்ளதை வரவேற்கிறேன். பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மாஹாபொல  கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

களனி பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் தான் கடந்த காலங்களில் மக்கள் விடுதலை முன்னணிக்கு சார்பாக செயற்பட்டு கடந்த அரசாங்கங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்கள். களனியில் இருந்து கொழும்புக்கு பேரணியாக வருவார்கள். ஆகவே  தற்போது அதிகரித்துள்ள கொடுப்பனவை மேலும் அதிகரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எமது அரசாங்கத்தில் முன்பிள்ளை பாடசாலை  ஆசிரியர்களின் சம்பளம் 2000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. ஆனால் இந்த வரவு செலவுத் திட்டத்தில் 1000 ரூபாய் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது.  தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு இது போதுமானதல்ல.

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு 5000 மில்லியன் ரூபாவும், முல்லைத்தீவு பகுதியில் பாலம் நிர்மாணிப்புக்க 1000 மில்லியன் ரூபாவும் என்ற  அடிப்படையில் 6000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால்  ஏனைய மாகாணங்களுக்கு இவ்வாறு பாரிய நிதி ஒதுக்கப்படவில்லை. அனைத்து மாகாணங்களுக்கும்  அபிவிருத்திக்கு சமமான வகையில் நிதி ஒதுக்க வேண்டும்.

மக்கள் தமது குறைகளை எங்களிடம் குறிப்பிடுகிறார்கள். அந்த குறைகளை நாங்கள் அரசாங்கத்திடம் குறிப்பிடுவோம்.  அந்த குறைகளுக்கு முறையான தீர்வினை பெற்றுக் கொடுக்காவிடின் கோட்டபய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஏற்பட்ட கதியே நேரிடும் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வடக்குக்கு ஏன் அதிக கரிசனை? | Tamil Leader | We Lead the Nation