Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

இலங்கையில் அபிவிருத்தி முதலீட்டை 19.2 மில்லியன் டொலர்களால் அதிகரிக்க முடிவு!

T

The Leader Desk

செப்டம்பர் 21, 2023 • 5:04 AM

இலங்கையில் அபிவிருத்தி முதலீட்டை 19.2 மில்லியன் டொலர்களால் அதிகரிக்க முடிவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மேலதிக நிதிகளாக வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ளதாக இலங்கை நிதியமைச்சில் நடைபெற்ற ஒரு விழாவில் அமெரிக்கா இன்று அறிவித்தது.
  • சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பு (USAID) மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றிற்கிடையிலான ஒரு அபிவிருத்தி நோக்கத்திற்கான மானிய ஒப்பந்தத்தின் ஊடாக அமெரிக்கா வழங்கும் இந்த 19.23 மில்லியன் டொலர்கள் (ரூ.
  • மஹிந்த சிறிவர்தன ஆகியோர் பங்குபற்றிய ஒரு விழாவில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
  • ஆம் ஆண்டு முதல் உதவியாக 2 பில்லியன் டொலர்களுக்கும் (கிட்டத்தட்ட ரூ.720 பில்லியன்) அதிகமான தொகையினை இலங்கைக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.
எழுத்து அளவு:

மேலதிக நிதிகளாக வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ளதாக இலங்கை நிதியமைச்சில் நடைபெற்ற ஒரு விழாவில் அமெரிக்கா இன்று அறிவித்தது.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பு (USAID) மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றிற்கிடையிலான ஒரு அபிவிருத்தி நோக்கத்திற்கான மானிய ஒப்பந்தத்தின் ஊடாக அமெரிக்கா வழங்கும் இந்த 19.23 மில்லியன் டொலர்கள் (ரூ. 6.2 பில்லியன்) கட்டுப்படுத்தப்படும். இந்த அபிவிருத்தி உதவியானது பொருளாதார வளர்ச்சி மற்றும் ஜனநாயக ஆட்சி நடவடிக்கைகளுக்கு உதவி செய்வதுடன் இலங்கையுடனான தனது பங்காண்மை மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான நீடித்த உறவுகளை கட்டியெழுப்புதல் ஆகிய விடயங்களில் அமெரிக்கா கொண்டுள்ள தொடரான அர்ப்பணிப்பினையும் இது வௌிப்படுத்துகிறது.

செயற்பணிப் பணிப்பாளர் கிராவ் மற்றும் இலங்கை நிதி அமைச்சின் திறைசேரியின் செயலாளர் திரு. கே.எம். மஹிந்த சிறிவர்தன ஆகியோர் பங்குபற்றிய ஒரு விழாவில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

“USAID நிர்வாகி சமந்தா பவர் மற்றும் அதிமேதகு ஜனாதிபதி விக்கிரமசிங்க ஆகியோர் நியூயோர்க் நகரில் கலந்துரையாடியவாறு, இலங்கையுடனான எமது பங்காண்மை மற்றும் இந்த ஆச்சரியமான, வாய்ப்புகள் நிறைந்த நாட்டின் மக்களுக்கு நாங்கள் செய்யும் தொடரான உதவி ஆகியவற்றினை இந்த முதலீடு நிரூபிக்கிறது.” என இலங்கை மற்றும் மாலைதீவிற்கான USAID செயற்பணிப் பணிப்பாளர் கெப்ரியல் கிராவ் தெரிவித்தார். “இந்த நிதியைப் பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சி மற்றும் ஜனநாயக ஆட்சி ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகவும், பாதிப்படையக்கூடிய மக்களுக்கு உதவி செய்வதற்காகவும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

“அமெரிக்க அரசாங்கத்தின் தொடர்ச்சியான நெருங்கிய ஒத்துழைப்பினையும், மிகுந்த உள்ளன்புடைய பங்காண்மையினையும் மற்றும் இலங்கைக்கு வழங்கிய உதவியினையும் இலங்கை மக்கள் பாராட்டுகின்றனர்” என செயலாளர் சிறிவர்தன கூறினார். “ஜனநாயக, செழிப்பான மற்றும் மீண்டெழும் தன்மையுடைய இலங்கையை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை இம்மானியமானது வலுப்படுத்தும்.” என அவர் மேலும் கூறினார்.

1956 ஆம் ஆண்டு முதல் உதவியாக 2 பில்லியன் டொலர்களுக்கும் (கிட்டத்தட்ட ரூ.720 பில்லியன்) அதிகமான தொகையினை இலங்கைக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...