Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

19 வயது யுவதியுடன் ஓடிய குடும்பஸ்தர் அடித்து கொலை!

T

The Leader Desk

ஆகஸ்ட் 8, 2023 • 3:51 AM

19 வயது யுவதியுடன் ஓடிய குடும்பஸ்தர் அடித்து கொலை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சங்குவேலி பகுதியைச் சேர்ந்த மரியதாஸ் ஜெயதாஸ் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
  • இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 5 ஆம் திகதி குளிப்பதற்கு போவதாக சொல்லிவிட்டு சென்ற யுவதியை காணவில்லை என உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் அன்றைய தினமே முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • இந்நிலையில், மரியதாஸ் ஜெயதாஸ் என்ற 55 வயதுடைய நபர் ஒருவருடன் குறித்த 19 வயது யுவதிக்கு தொடர்பு ஏற்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் வீட்டை விட்டு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
  • இந்நிலையில் அவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறிய உறவினர்கள், அவர்களை ஊருக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
எழுத்து அளவு:

 உயிரிழந்தார்.

சங்குவேலி பகுதியைச் சேர்ந்த மரியதாஸ் ஜெயதாஸ் என்ற  குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 5 ஆம் திகதி குளிப்பதற்கு போவதாக சொல்லிவிட்டு சென்ற யுவதியை காணவில்லை என உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் அன்றைய தினமே முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மரியதாஸ் ஜெயதாஸ் என்ற 55 வயதுடைய நபர் ஒருவருடன் குறித்த 19 வயது யுவதிக்கு தொடர்பு ஏற்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் வீட்டை விட்டு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறிய உறவினர்கள், அவர்களை ஊருக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

அதன்படி, இருவரும் நேற்றைய தினம் (07) ஊருக்கு வந்த போது 55 வயதுடைய நபர் மக்களால் நையப்புடைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த நபரை மீட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அனுப்ப பொலிஸார் நடவடிக்கை எடுத்த போது, இடை வழியில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த யுவதியும் தற்போது தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள   அதே வேளை மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...