அதன்போது அவர் மேலும் கூறுகையில், கொரோனா தாக்கத்துக்குள்ளாகும் கைதிகளை பிணையில் விடுவிக்குமாறு அரசாங்கம் கூறுகிறது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாக சிறையிலுள்ளனர்.
அவர்களில் பலருக்கு கொவிட்19 தொற்று ஏற்பட்டு மாறியுள்ளது. அவர்களை பிணையில் விடுங்களென பல தடவைகள் கோரியிருந்தோம். ஆனால், விடுவிக்கவில்லை. கொவிட்19 நிலைமையை கருத்திற்கொண்டு அவர்களை பிணையிலாவது விடுவிக்க வேண்டும் என்றார்.


