Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

முத்துஐயன்கட்டு குடும்பஸ்தர் பலி; ஆராய இரு விசேட பொலிஸ் குழுக்கள்; ‘ஒரு தலைப்பட்சமாக செயற்படவில்லை’

T

The Leader Desk

ஆகஸ்ட் 18, 2025 • 4:26 AM

முத்துஐயன்கட்டு குடும்பஸ்தர் பலி; ஆராய இரு விசேட பொலிஸ் குழுக்கள்; ‘ஒரு தலைப்பட்சமாக செயற்படவில்லை’

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வருகின்றன என பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் எப்.யூ.வூட்லர் தெரிவித்தார்.
  • இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், சம்பவம் தொடர்பில் இதுவரையில் 3 இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • இதேவேளை, “ஒட்டுச்சுட்டான் - முத்துஐயன்கட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழந்த விவகாரத்தில் ஒரு தலைப்பட்சமாக செயற்படுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் முயற்சிக்கவில்லை” என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்தார்.
  • “குறித்த நபர் தொடர்பில் இதற்கு முன்னரும் அதாவது ஜனவரி 18ஆம் திகதி இதே முகாமிற்குள் நுழைந்து பொருட்களை திருடியமை தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

வருகின்றன என பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் எப்.யூ.வூட்லர் தெரிவித்தார்.

நேற்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் அவர்  தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சம்பவம் தொடர்பில் இதுவரையில் 3 இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் கொள்ளையிடுவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலை மேற்கொண்டு காயப்படுத்திய குற்றச்சாட்டில் மற்றைய சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகாமுக்குள் உட்பிரவேசிக்க முயன்ற சிவில் பிரஜைகளிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே குறித்த இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறிருப்பினும் இதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை, “ஒட்டுச்சுட்டான் - முத்துஐயன்கட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழந்த விவகாரத்தில் ஒரு தலைப்பட்சமாக செயற்படுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் முயற்சிக்கவில்லை” என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்தார்.

“இராணுவ முகாமிற்குள் சில தரப்பினர் அனுமதியின்றி பிரவேசிக்க முற்பட்டமையே இந்த சம்பவத்துக்கான அடிப்படை காரணியாகும். இவ்வாறு உட்பிரவேசித்தவர்களில் ஒருவர் பிடிபட்ட நிலையில் அவர் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

“குறித்த நபர் தொடர்பில் இதற்கு முன்னரும் அதாவது ஜனவரி 18ஆம் திகதி இதே முகாமிற்குள் நுழைந்து பொருட்களை திருடியமை தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இந்த தகவல் கிடைத்த பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கமைய இந்த மரணத்துக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பில்லை எனத் தெரியவந்துள்ளது.

“இந்த விவகாரத்தில் ஒரு தலைப்பட்சமாக செயற்படுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் முயற்சிக்கவில்லை. பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம்” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...