Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியாத உள்ளூராட்சிமன்றங்களின் அதிகாரம் ஆணையாளரிடம்!

T

The Leader Desk

ஜூலை 18, 2025 • 3:25 AM

தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியாத உள்ளூராட்சிமன்றங்களின் அதிகாரம் ஆணையாளரிடம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொண்டுவரப்படும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
  • உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் நடைபெற்று சுமார் 2 மாதங்கள் நிறைவடைந்துள்ள போதிலும், 50இற்கும் மேற்பட்ட சபைகளில் ஆட்சி அதிகாரத்தை அமைக்க முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  • மேலும், பெண் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக, வனாத்தவில்லு பிரதேச சபையின் அதிகாரம் இன்றுவரை நிறுவப்படவில்லை.
  • முழு உறுப்பினர்களில் 50% வீதமானவர்கள் சபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதாலும், சில உறுப்பினர்கள் வேண்டுமென்றே கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து வருவதாலும் இந்த நிலைமை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
எழுத்து அளவு:

கொண்டுவரப்படும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் நடைபெற்று சுமார் 2 மாதங்கள் நிறைவடைந்துள்ள போதிலும், 50இற்கும் மேற்பட்ட சபைகளில் ஆட்சி அதிகாரத்தை அமைக்க முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையிலேயே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

உறுப்பினர்கள் சபையில் பங்கேற்காமை, உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வெளியிடத் தவறியது மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் காரணமாக குறித்த சபைகளில் அதிகாரம் நிறுவப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பெண் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக, வனாத்தவில்லு பிரதேச சபையின் அதிகாரம் இன்றுவரை நிறுவப்படவில்லை.

முழு உறுப்பினர்களில் 50% வீதமானவர்கள் சபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதாலும், சில உறுப்பினர்கள் வேண்டுமென்றே கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து வருவதாலும் இந்த நிலைமை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், இதன் காரணமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தாமதமாகியுள்ளதாக உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மே 6ஆம் திகதி 337 உள்ளூராட்சி மன்றங்களுக்காக தேர்தல் நடைபெற்ற நிலையில், இதில் சுமார் 8,000 வேட்பாளர்கள் போட்டியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...