Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

‘தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன்’

T

The Leader Desk

ஜூலை 18, 2025 • 3:03 AM

‘தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன்’

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நடவடிக்கைகளை பின்வாங்காமல் செயற்படுத்துவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
  • மல்வத்து - அஸ்கிரி உபய மகா விகாரையின் அனுநாயக்க தேரர் உட்பட நிர்வாக சபை நாயக்க தேரர்களுடன் இன்று (17) பிற்பகல் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • மல்வத்து - அஸ்கிரி மகா நாயக்க தேரர்களின் அனுசாசனைக்கு அமைவாக மத, தேசிய மற்றும் சமூகம் சார்ந்த விசேட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதே இதன் நோக்கமாகும்.
எழுத்து அளவு:

நடவடிக்கைகளை பின்வாங்காமல் செயற்படுத்துவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மல்வத்து - அஸ்கிரி உபய மகா விகாரையின் அனுநாயக்க தேரர் உட்பட நிர்வாக சபை நாயக்க தேரர்களுடன் இன்று (17) பிற்பகல் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மல்வத்து - அஸ்கிரி மகா நாயக்க தேரர்களின்  அனுசாசனைக்கு அமைவாக மத, தேசிய மற்றும் சமூகம் சார்ந்த விசேட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதே இதன் நோக்கமாகும்.

பௌத்த சாசன  விடயங்களில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்க, பௌத்த விகாரை தேவாலகம் சட்டம்,  போன்ற பல்வேறு சட்டங்களில் சரியான நேரத்தில் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டியதன் அவசியம் குறித்தும் மற்றும் பிக்குமார்களுக்கான கல்வி தொடர்பாகவும் மகா சங்கத்தினர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

தற்போதைய சவால்களை அடையாளம் கண்டு, மத விழுமியங்கள் மற்றும் கலாசாரத்தைப் பாதுகாக்க அரசாங்கம் முன்வந்து ஒரு வேலைத்திட்டத்தை வகுப்பதன் முக்கியத்துவம் மற்றும் பௌத்த சாசனப் பிரச்சினைகளுக்காகவும் பௌத்த சாசன முன்னேற்றத்திற்காகவும் அரசாங்கத்தின் பங்களிப்பைப் பற்றி கலந்துரையாடுவதற்கு புத்தசாசன செயற்பாட்டு ஆலோசனைக் குழுவொன்றை நிறுவுவதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

பௌத்த சாசன ரீதியாக நிலவும் பல்வேறு சவால்கள் மற்றும் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை உடனடியாகத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

மல்வத்து மகாவிகாரை பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி வண, திம்புல்கும்புரே விமலதம்ம அனுநாயக்க தேரர், கலாநிதி வண, பஹமுனே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர், வண, ரம்புக்வெல்லே ஸ்ரீ நந்தாராம நாயக்க தேரர், வண, தொரனேகம ஸ்ரீ ரதனபால நாயக்க தேரர், வண, திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த மேதங்கர நாயக்க தேரர், வண, வெலகெதர ஸ்ரீ சுமணஜோதி நாயக்க தேரர்,  வண, மஹவெல ஸ்ரீ ரதனபால நாயக்க தேரர், அஸ்கிரி மகா விகாரையை பிரதிநிதித்துவப்படுத்தி  வண, வெடருவே உபாலி அனுநாயக்க தேரர், வண, ஆனமடுவே ஸ்ரீ தம்மதஸ்ஸி அனுநாயக்க தேரர், கலாநிதி வண, உருளேவத்தே ஸ்ரீ தம்மரக்கித நாயக்க தேரர்,வண, கொடகம ஸ்ரீ மங்கள நாயக்க தேரர், கலாநிதி வண,மெதகம தம்மாநந்த தேரர், வண, நாரம்பனாவே ஸ்ரீ ஆனந்த நாயக்க தேரர்,வண, முருந்தெனியே ஸ்ரீ தம்மரதன நாயக்க தேரர்  வண,கெட்டகும்புரே ஸ்ரீ தம்மாராமய நாயக்க தேரர் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

‘தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன்’ | Tamil Leader | We Lead the Nation