Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் சிறைக்குச் சென்ற கெஹெலியவின் குடும்பம்!

T

The Leader Desk

ஜூன் 18, 2025 • 1:15 PM

பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் சிறைக்குச் சென்ற கெஹெலியவின் குடும்பம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
  • அதன்படி, சந்தேக நபர்கள் ஒவ்வொருவரும் தலா 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், சந்தேக நபர்களுக்கு வௌிநாட்டு பயணத்தடை உத்தரவையும் பிறப்பித்தார்.
  • இந்த சந்தேக நபர்கள் 97.35 மில்லியன் ரூபாவை சட்டவிரோதமாகப் பெற்றமை தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட விசாரணைக்கு அமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டனர்.
  • குறித்த சந்தேக நபர்களின் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் குறித்து இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு தகவல் அளித்ததாகவும், அதன்படி, இந்த விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:

ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இடம்பெற்றுவரும் விசாரணைக்கு அமைவாக, கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் விடுவிக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இன்று (18) உத்தரவிட்டார்.

அதன்படி, சந்தேக நபர்கள் ஒவ்வொருவரும் தலா 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், சந்தேக நபர்களுக்கு வௌிநாட்டு பயணத்தடை உத்தரவையும் பிறப்பித்தார்.

இந்த வழக்கு நீதவானின் உத்தியோகபூர்வ அறையில் விசாரணைக்கு வந்தது. அங்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பித்தனர். இந்த சந்தேக நபர்கள் 97.35 மில்லியன் ரூபாவை சட்டவிரோதமாகப் பெற்றமை தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட விசாரணைக்கு அமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டனர்.

குறித்த சந்தேக நபர்களின் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் குறித்து இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு தகவல் அளித்ததாகவும், அதன்படி, இந்த விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி, இந்த வழக்கின் இரண்டாவது சந்தேக நபரான முன்னாள் அமைச்சரின் மனைவிக்கும், மூன்றாவது சந்தேக நபரான மகளுக்கும் சொந்தமான தலா 30 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு நிலையான வைப்பு கணக்குகள் விசாரணைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களுக்குச் சொந்தமான ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், இந்த சந்தேக நபர்களுக்குச் சொந்தமான 150 இலட்சம் ரூபா வைப்பிலிடப்பட்ட மூன்று வங்கிக் கணக்குகள் வேறு நபர்களின் பெயர்களில் வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்வைக்கப்பட்ட அனைத்து சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதவான், சந்தேக நபர்களை பிணையில் விடுவித்து உத்தரவிட்டார். இந்த வழக்கு ஓகஸ்ட் 24ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் நீதவான் அறிவித்தார்.

எவ்வாறாயினும், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி குசும் பிரியதர்ஷினி மற்றும் மகள் சந்துல ரமாலி ரம்புக்வெல்ல ஆகியோர் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...