Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

இஸ்ரேலின் போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதை அடுத்து அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு!

T

The Leader Desk

ஜூன் 18, 2025 • 3:16 AM

இஸ்ரேலின் போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதை அடுத்து அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விமானங்களுக்கான ஓர்டரை பாதியாகக் குறைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • போர் விமான உற்பத்தி நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டினுக்கு 48 ஜெட் விமானங்களுக்கான ஓர்டரை 24 ஆகக் குறைத்து திருத்தப்பட்ட உத்தரவை பென்டகன் பிறப்பித்துள்ளது.
  • ஈரான்-இஸ்ரேல் போர், அமெரிக்க விமானப்படையின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான F-35இன் பலவீனங்களை வெளிப்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
  • ஈரானின் அரசு செய்தி நிறுவனமான IRNA, திங்களன்று மேற்கு ஈரானின் தப்ரிஸ் அருகே நான்காவது F-35 ஜெட் சுட்டு வீழ்த்தப்பட்டு, விமானி கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தது.
எழுத்து அளவு:

விமானங்களுக்கான ஓர்டரை பாதியாகக் குறைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் விமான உற்பத்தி நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டினுக்கு 48 ஜெட் விமானங்களுக்கான ஓர்டரை 24 ஆகக் குறைத்து திருத்தப்பட்ட உத்தரவை பென்டகன் பிறப்பித்துள்ளது.

ஈரான்-இஸ்ரேல் போர், அமெரிக்க விமானப்படையின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான F-35இன் பலவீனங்களை வெளிப்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஈரானின் அரசு செய்தி நிறுவனமான IRNA, திங்களன்று மேற்கு ஈரானின் தப்ரிஸ் அருகே நான்காவது F-35 ஜெட் சுட்டு வீழ்த்தப்பட்டு, விமானி கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தது. ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உலகின் முதல் நாடு ஈரான் என்றும் கூறியது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இந்த கூற்றை மறுத்தாலும், வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த ஆயுதத் திட்டமான F-35 இலிருந்து அமெரிக்கா பின்வாங்கும் முடிவை எடுத்துள்ளது.

F-35 விமானத்தின் பயணத் திறன் 2025 ஆம் ஆண்டளவில் 51.5 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பாகங்களைப் பெறுவதில் உள்ள சிரமம், சிக்கலான பராமரிப்பு மற்றும் அதிக விலை ஆகியவை இந்த விமானத்தின் முக்கிய குறைபாடுகளாகக் கூறப்படுகின்றன.

ட்ரோன் போர் அதிகரித்துள்ள காலகட்டத்தில் F-35 காலாவதியானது என்று எலான் மஸ்க் உட்பட பலர் விமர்சித்த நிலையில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு போர் நிறுத்தம் அல்ல, நீடித்த தீர்வைக் காண்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...