Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

தேசிய வெற்றி விழா: முதலில் கலந்துகோள்ள முடியாதென்றார், இப்போது முடியுமென்கிறார்; அநுரவின் கணக்குதான் என்ன?

T

The Leader Desk

மே 18, 2025 • 1:40 PM

தேசிய வெற்றி விழா: முதலில் கலந்துகோள்ள முடியாதென்றார், இப்போது முடியுமென்கிறார்; அநுரவின் கணக்குதான் என்ன?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • "தேசிய வெற்றி கொண்டாட்டத்தில்" ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்பார் என்று இராணுவ வீரர்கள் சேவை அதிகாரசபை தெரிவித்துள்ளது.
  • யுத்த வெற்றியின் 16வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் "தேசிய வெற்றி கொண்டாட்டம்" நாளை (19) நடைபெறவுள்ளது.
  • இந்த நிகழ்வு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள இராணு வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு முன்பாக மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெறவுள்ளது.
  • மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்த நாட்டில் நிலவிய யுத்தம் முடிவடைந்து இன்றுடன் (18) 16 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
எழுத்து அளவு:

"தேசிய வெற்றி கொண்டாட்டத்தில்" ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்பார் என்று இராணுவ வீரர்கள் சேவை அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வு, ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் என்று அதன் தலைவர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் செனரத்  கோஹோன தெரிவித்தார்.

யுத்த வெற்றியின் 16வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் "தேசிய வெற்றி கொண்டாட்டம்" நாளை (19) நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள இராணு வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு முன்பாக மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெறவுள்ளது.

முன்னதாக, இந்த நிகழ்வில் தான் கலந்துகொள்ளப்போவதில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்த நிலையில், தேசிய வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வை, பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தலைமையில் நடத்த ஏற்பாடாகியிருந்தது.

இந்நிலையிலேயே, இந்நிகழ்வுக்கு ஜனாதிபதி தலைமை தாங்குவார் என்று, இராணுவ வீரர்கள் சேவை அதிகாரசபை அறிவித்துள்ளர்து.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்த நாட்டில் நிலவிய யுத்தம் முடிவடைந்து இன்றுடன் (18) 16 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

2009 மே மாதம் வரை நீடித்த யுத்தம், நந்திக்கடல் பகுதியில், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதோடு முடிவுக்கு வந்தது.

உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நடவடிக்கையில் விடுதலைப் புலிகளால் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களை விடுவித்த பெருமையும் நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு உண்டு.

போர் வெற்றியின் 16வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் "தேசிய வெற்றி கொண்டாட்டம்" நாளை (19) நடைபெறவுள்ளது.

இந்த நினைவு நிகழ்வு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள இராணுவ வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு முன்பாக மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெறவுள்ளது.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் நடைபெறும் இந்த தேசிய போர் வீரர் நினைவு நிகழ்வில், பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர முப்படைகளையும் வழிநடத்திய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் வசந்த கரன்னாகொட, மற்றும் மார்ஷல் ஆஃப் தி ஏர்ஃபோர்ஸ் ரோஷன் குணதிலக ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.

இதற்கிடையில், தேசபக்தி தேசிய முன்னணி நேற்று ஒரு ஊடக சந்திப்பை நடத்தி, தேசிய போர் வீரர்கள் தினத்தை முன்னிட்டு இன்று ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...