Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

செம்மணியில் 3 அடி ஆழத்தில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடு!

T

The Leader Desk

மே 18, 2025 • 3:48 AM

செம்மணியில் 3 அடி ஆழத்தில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அகழ்வில் மூன்றடி ஆழத்தில் ஒரு முழுமையான மனித எழும்புக்கூடு மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் பாரிய மனிதப் புதைகுழி காணப்படலாம் என்ற சந்தேகம் மேலும் வலுப்பெற்றுள்ளது.
  • அந்த மனித எச்சங்கள் 1995, 1996ஆம் ஆண்டுகளில் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.
  • முறைப்பாட்டின் பிரகாரம் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி யாழ் நீதிமன்ற நீதிவான் மேற்கொண்ட ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து, மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஸ்கான் ஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
  • இந்தப் பணிகள் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை ஆரம்பமான நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் அகழ்வின்போதே இந்த மனித எலும்புக் கூட்டுத் தொகுதி மீட்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

அகழ்வில் மூன்றடி ஆழத்தில் ஒரு முழுமையான மனித எழும்புக்கூடு மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் பாரிய மனிதப் புதைகுழி காணப்படலாம் என்ற சந்தேகம் மேலும் வலுப்பெற்றுள்ளது.

செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் குழிகள் வெட்டப்பட்டபோது, மனித எச்சங்கள் பல மீட்கப்பட்டிருந்தன.

அந்த மனித எச்சங்கள் 1995, 1996ஆம் ஆண்டுகளில் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி யாழ் நீதிமன்ற நீதிவான் மேற்கொண்ட ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து, மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஸ்கான் ஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தப் பணிகள் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை ஆரம்பமான நிலையில்,  நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற  இரண்டாம் நாள் அகழ்வின்போதே இந்த மனித எலும்புக் கூட்டுத் தொகுதி மீட்கப்பட்டுள்ளது.

முழுமையான என்புத் தொகுதி, மண்டையோடு என்பவற்றுக்கு மேலதிகமாக கை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அகழ்வு செய்யப்படும் பகுதியின் வெவ்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டதால், அந்த இடம் பாரிய மனிதப் புதைகுழியாக இருக்கலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் மூன்றாம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் மழை காரணமாக அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...