Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

துசித ஹல்லோலுவவின் கார் மீது துப்பாக்கிச் சூடு விவகாரம்: சிசிடீ விசாரணை ஆரம்பம்!

T

The Leader Desk

மே 18, 2025 • 3:46 AM

துசித ஹல்லோலுவவின் கார் மீது துப்பாக்கிச் சூடு விவகாரம்: சிசிடீ விசாரணை ஆரம்பம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
  • நாரஹேன்பிட்டி பகுதியில் நேற்று இரவு (17) துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
  • துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் துசித ஹல்லோலுவவுடன் காரில் சாரதியும் சட்டத்தரணியும் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எழுத்து அளவு:

இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாரஹேன்பிட்டி பகுதியில் நேற்று இரவு (17) துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ பயணித்த காரின் மீதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் துசித ஹல்லோலுவவுடன் காரில் சாரதியும் சட்டத்தரணியும் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு துசித ஹல்லோலுவவுக்குச் சொந்தமான கோப்பை யாரோ திருடிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

அதேநேரம் துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, துசித ஹல்லோலுவ மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதில் காயமடைந்த அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

துசித ஹல்லோலுவவின் கார் மீது துப்பாக்கிச் சூடு விவகாரம்: சிசிடீ விசாரணை ஆரம்பம்! | Tamil Leader | We Lead the Nation